இந்தியாவிலேயே அதிக வாக்காளர்கள் தமிழகத்தில் நீக்கம்.. மே.வங்கம் நம்பர் 2.. முழு டேட்டா
சென்னை: இந்தியாவிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக தமிழகத்தில் தான் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு டேட்டா பின்வருமாறு:
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இதுதொடர்பாக அவர்,‛‛வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதம் ஆகும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு முன்பாக மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 என்ற அளவில் உள்ளது'' என்று கூறினார்.
முன்னதாக ‛சார்' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையின் படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் ‛சார்' நடவடிக்கைக்கு முன்பு 7.6 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.08 ஆக குறைந்தது.
அதேபோல் பாஜக ஆளும் ராஜஸ்தானில் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இங்கு மொத்தம் 5.46 கோடி பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில் தற்போது 5.04 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் கோவாவில் 1.42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் கோவாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.85 லட்சத்தில் இருந்து 10.84 லட்சமாக சரிந்துள்ளது.
இதுதவிர பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆளும் புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை எடுத்து கொண்டால் அங்கு மொத்தம் 10.21 லட்சம் வாக்காளர்கள் இருந்தன. இப்போது 9.18 லட்சம் வாக்காளர்களாக குறைந்துள்ளது.
லட்சத்தீவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 56,384 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 57,813 ஆக வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.லட்சத்தீவில் 1,500 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக பீகாரில் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது. அதன்படி பார்த்தால் 2025ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்கள் (97. 37 லட்சம் பேர்) நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்!












Click it and Unblock the Notifications