மன்னிப்பு கேட்ட சிவக்குமார்! எனக்கு திருமணம் செய்து வைத்ததே அவர் தான்! சால்வை வழங்கிய கரீம் உருக்கம்
சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நிகழ்ச்சியில் சால்வையை தூக்கியெறிந்த சம்பவத்துக்கு நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் தான் சால்வை வழங்கிய கரீம் என்பவருக்கு நடிகர் சிவக்குமார் தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த தகவல் வெளியாகி உள்ளது. இதனை சால்வை வழங்கிய கரீமே உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக சூர்யா, கார்த்தி வலம் வருகின்றனர். இவரது தந்தை சிவக்குமார். இவரும் தமிழ் சினிமாவில் நடிகர், குணச்சித்திர வேடங்களில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தந்தை சிவக்குமார் வழியில் சூர்யா, கார்த்தி திரைப்படத்துறையில் நுழைந்து நடிகர்களாக ஜொலித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சிவக்குமார் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குகிறார். இதற்கு முன்பு அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை நடிகர் சிவக்குமார் கீழே தட்டிவிட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது. அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" நூல் வெளியிட்டு விழாவில் சிவக்குமார் பங்கேற்றார். இந்த விழாவில் சிவக்குமாருக்கு, கரீம் என்பவர் சால்வை அணிவிக்க சென்றார். அப்போது சிவக்குமார் சால்வையை வாங்கி கீழே வீசினார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. நடிகர் சிவக்குமாரை அனைவரும் விமர்சனம் செய்தனர்.
‛அவர் என் தம்பி தான்’.. மன்னிப்பு கோரிய சிவக்குமார்! சால்வை தந்த நபருடன் இணைந்து உருக்கமான வீடியோ
இந்நிலையில் தான் சிவக்குமார், கரீமுடன் சேர்ந்து காரைக்குடி நிகழ்ச்சியில் சால்வையை தூக்கியெறிந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ‛‛1971ல் மன்னார்குடியில் உள்ள நாடகத்துக்கு தலைமை தாங்க போனபோது எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. 1974ல் எனது கல்யாணத்துக்கு வந்திருந்தார். அவரது கல்யாணத்தை நான் தான் செய்து வைத்தேன். சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தே கரீம் கையில் சால்வை வைத்திருந்தார். தெரிந்து கொண்டே சால்வையை எடுத்து வந்தது அவரது தவறு. பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்ற முறையில் நான் செய்ததும் தப்புத்தான். I Feel Sorry.. அதற்காக நான் ரொம்ப வருத்தப்படுகிறேன்’’ என தெரிவித்தார்.

இந்த வீடியோவில் கரீம் பேசுகையில், ‛‛மன்னார்குடிக்கு வந்தபோது அவரை வரவேற்றது நான் தான். நாடக நிகழ்ச்சி நன்றாக நடந்து முடிந்தது. நான் ஊருக்கு போக வேண்டும் என்று கூறினார். அப்போது அண்ணா, வந்ததில் இருந்து சாப்பிடவே இல்லையே என்றேன். அதற்கு அவர் 2 நாள் தூக்கம் இல்லை. அதனால் நான் எப்போதும் சாப்பிடும் வெங்காயம் மற்றுமு் தயிர் சோறு கொடுத்தால் போதும். அவரது கல்யாணத்துக்கு சென்றிருந்தேன். அங்கு அனைவரையும் வரவேற்றேன். அண்ணன் புதுப்பேட்டையில் இருந்தார். அப்போது அவரது அம்மா என்னை திருமணம் செய்து கொள்ள கூறினார். அண்ணனே எனக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
கல்யாணத்துக்கு வந்தது மட்டும் அல்ல. அதன்பிறகும் அவரே டிக்கெட் எடுத்து வந்துவிடுவார். வந்துட்டேன்டா எங்கடா இருக்கிறாய் என கேட்பார். அந்த அளவுக்கு என் மீது பாசம் கொண்டவர். இந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது சால்வை எடுத்து செல்ல வேண்டாம் என்றார். முக்கியமான இடத்துக்கு பேச வருகிறார். பெரிய இடத்தில் பேச வருகிறார் என்று கூறிவிட்டு தான் சால்வை எடுத்து கொண்டு சென்றேன். ஆனால் நான் சால்வையை எடுத்து சென்றது தப்புத்தான்’’ என தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications