சிறுநீரோடு ரத்தம்.. அலறிய அஜித் குமார்! திமுக கவுன்சிலர் தோட்டத்தில் தாக்குதல்! அதிமுக வக்கீல் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிவகங்கை அஜித் குமார் மரணம் தொடர்பாக நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் திமுக கவுன்சிலரின் தோட்டத்தில் வைத்து தான் அஜித் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ரத்தத்தோடு அவர் சிறுநீர் கழித்த காட்சிகள் கோவில் சிசிடிவியில் பதிவாகி இருப்பதாக அதிமுக வழக்கறிஞர் அதிரவைக்கும் தகவலை கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா உட்பட்ட மடப்புரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண்களுடைய வாகனத்திலிருந்து நகைகள் திருடு போனது சம்பந்தமாக காவல்துறையினரின் விசாரணையில் பரிதாபமாக உயிரிழந்தார் அஜித்குமார்.

தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென பல அமைப்புகள், கட்சிகள், தனி வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், அதிமுக தரப்பில் வழக்கறிஞர் மாரிஸ்குமார் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

sivagangai Custodial Death CBI

இந்நிலையில், வழக்கு விசாரணை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வழக்கு நடைபெறும் போது நீதிபதிகளின் போக்கை பார்த்து தமிழக அரசே தற்போது குற்றத்தை ஒத்துக் கொண்டு விட்டது. குறிப்பாக ஒரு கொலை குற்றவாளி ஒருவரை கொலை செய்யக் கூடிய நேரத்தில் கூட இதுபோன்ற காயங்கள் பிரேத பரிசோதனையில் இருக்காது என்பதை பதிவு செய்திருக்கிறார்கள். 44 இடங்களில் அவரது உடலில் காயங்கள் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் மிளகாய் பொடியை அவரது மர்ம உறுப்பு உட்பட உடல் முழுவதும் போடப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இதை சிபிஐ மாற்றத்திற்கு உங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றால் எழுத்துப்பூர்வமாக நீங்கள் தாக்கல் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி அதாவது மாவட்ட நீதிபதி சுந்தர்லால் சுரேஷ் என்பவரிடம் தற்போது இருக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால் ஏற்கனவே கோவிலிலே சென்று அங்கு இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா குறித்த காட்சிகளை எடுத்து அவர்கள் சென்றிருப்பதால் தான் அங்கே நடக்கக்கூடிய குற்றத்தை கண்டுபிடிப்பதற்கு எவிடன்ஸ் கலெக்ஷனை இவர்கள் அழித்து இருக்கிறார்கள். அங்கே இருந்த பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் எடுத்து சென்று இருக்கிறார்கள். காவலர்கள் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப்பு கொண்டு தாக்கக்கூடிய காட்சிகள் வீடியோவாக வெளிவந்துள்ளன.

கண்காணிப்பு கேமராவில் ரத்தத்தோடு அவர் சிறுநீர் போன வீடியோக்களை அனைத்தும் கோவிலில் உள்ள வீடியோவில் இருக்கிறது. அதை காவலர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். அது எங்கே தற்போது இருக்கின்றது என்று தெரியவில்லை. ஒரு சிறப்பு காவலர் எடுத்துச் சென்றிருக்கிறார் என்று தமிழக அரசு ஒத்துக்கொண்டிருக்கிறது. நாளைக்குள்ளாக ஏற்கனவே நியமிக்கப்பட்ட நீதிபதியிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். வழக்கை எட்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

தமிழக அரசு செய்யக்கூடிய அனைத்து குற்றங்களையும் முதல் ஆளாக எதிர்க்கட்சியாக இருந்து நாங்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்கின்றோம். நாங்கள் இதை அரசியல் ஆக்கப் பார்க்கின்றோம் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு நீதிபதி சரியாக பதில் கொடுத்திருக்கிறார்கள். இதே அரசியல் தான் நீங்கள் ஏற்கனவே செய்தீர்கள். தூத்துக்குடி சம்பவத்தில் நீங்கள் செய்தது தான், தற்போது அவர்கள் செய்கிறார்கள். இது ஒன்றும் தவறு கிடையாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கண்டிப்பாக ஆளுங்கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.

எனவே எட்டாம் தேதி மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களுக்கு நிவாரணமும் கொடுத்தீர்களா ? என்று கேட்டார்கள். ஏற்கனவே எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார் என்று சொன்னார்கள். சில ஊடகங்களில் தெரிவித்தது போல தற்போது வரை ஒரு ரூபாய் கூட அவர்கள் கொடுக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு கேட்டு சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எட்டாம் தேதி அவர்களுக்கான இழப்பீடு கொடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சிபிஐ பொறுத்தமட்டில் அவர்களே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால் மாற்றங்கள். காரணம் நீதிபதி அரசுக்கு எதிராக பதிவு செய்த உத்தரவு மிகவும் மோசமாக சென்று விடும் என்பதை உணர்ந்து நீங்களே சிபிஐ வைக்க வேண்டும். ஆனால் மாற்றிக் கொள்ளுங்கள் என்கின்ற அளவுக்கு வந்து விட்டார்கள். எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

எனவே எட்டாம் தேதி எதிர்பார்க்கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எத்தனை இடத்தில் காயங்கள் இருக்கின்றது என்பதுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். நீதிபதிகள் சொன்ன கருத்தைத்தான் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இது முதல் கட்ட அறிக்கை தான் இதற்கு அடுத்து இன்னும் இரண்டு அறிக்கையில் வர வேண்டி உள்ளது.

உள்ளேயும் வெளியேயும் காயங்கள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதை பார்த்த நீதிபதிகளின் கருத்துதான் கொலை குற்றவாளிகள் கூட இதுபோன்று ஒரு கொடூரமாக செய்து கொலை செய்ய மாட்டான் என்பதை பதிவு செய்திருக்கிறார்கள். நீதி அரசர்களைப் பொறுத்தவரை தடயங்களை அழிக்கப்பட்டதாக தான் அவர்கள் கருதுகிறார்கள். காரணம் தற்போது அந்த வீடியோவில் பார்த்தால் கூட கைப்பற்ற பொருட்களில் வரும் பைப்புகள் மட்டும் தான் இருக்கின்றன. இந்த கம்பெல்லாம் அங்கே இல்லை.

திமுகவினுடைய கவுன்சிலரின் தோட்டத்தில் வைத்து தான் இவரை அடித்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம். அயோத்தி தோட்டம் என்கின்ற இடத்தில் தான் இவரை வைத்து டார்ச்சர் செய்ததாக எதிர் தரப்பிலிருந்து சொன்னபோது கவுன்சிலர் தோப்பு என்று சொன்னார்கள். அதுவும் ஆளுங்கட்சியின் உடைய கவுன்சிலர் என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றேன்.

அதற்கு எதிர் தரப்பு அரசு இதை இவர்கள் அரசியல் பார்க்கிறார்கள் என்று சொன்னார்கள். அதற்கு நீதிமன்றம் நீங்கள் பண்ணவில்லையா அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது சாத்தான்குளம் விஷயத்தில் என்று அதனால் இவர்களும் அதை செய்கிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லை என்று சொல்லி இருக்கிறார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+