சீமான் Vs விஜய்: வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், கலகங்கள்.. 'மர்ம தேசம்' சிவகெங்கை சீமை புதிர்கள்!
சென்னை: "வீரமங்கை வேலுநாச்சியார்".. 294 ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாதபுரம் மன்னர் பரம்பரையில் பிறந்து 'சிவகெங்கை' சீமை ( இன்றைய சிவகங்கை)யின் ராணியாக கோலோச்சியவர்.. இன்றைக்கும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறார் வீரமங்கை வேலுநாச்சியார். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்திய நடிகர் விஜய், வீரமங்கை வேலுநாச்சியார் தங்களது கட்சியின் வழிகாட்டி என்று அறிவித்தது விவாதத்துக்குரியதாக மாறி இருக்கிறது.
"தமிழ்நாட்டுக்கே வேலுநாச்சியார் யார் என்பதை நான் சொல்லித்தானே தெரியும்..நான் சொல்லாமல் இருந்திருந்தால் வேலுநாச்சியார் தமது கட்சியின் வழிகாட்டி என நடிகர் விஜய் அறிவிக்க முடியாது" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான் இப்படிப் பேசிக் கொண்டிருந்தாலும் வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் எல்லாம் வாழ்ந்த காலம் தொடங்கிய வரலாறு நெடுகிலும் வெவ்வேறு வடிவங்களில் பதிவு செய்யப்பட்டே வந்துள்ளனர். சிவகெங்கை சீமை என்ற தன்னரசு நாடு கிபி 1728-ல் உதயமானது நாள் முதல் சிவகெங்கை சீமை ஜமீனாகி பின்னர் அந்த உரிமையையும் இழந்த 1949-ம் ஆண்டு வரையிலான வரலாறு செப்பேடுகளாக, கல்வெட்டுகளாக, நாட்டுப் புறப் பாடல்களாக ஏன் திரைக்காவியமாகவும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக மன்னராட்சி காலத்தில் இருந்த அத்தனை அம்சங்களும் ராமநாதபுரம் சீமையில் இருந்து பிரிந்து உதயமான சிவகெங்கை சீமையிலும் இருந்தது. மன்னர் குடும்பங்களுக்கே உரித்தான கலகங்கள், துரோகங்கள், கவிழ்ப்புகள், யுத்தங்கள் அனைத்துக்கும் சிவகெங்கை சீமை விதிவிலக்கும் அல்ல.
சிவகெங்கை சீமையின் வரலாற்றில் இன்றைக்கும் பேசப்படுகிறவர்களாக இருப்பவர்கள் மன்னர் முத்துவடுகநாதர், அவரது மனைவி ராணி வேலுநாச்சியார், இவர்களது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தளபதிகள் மருது சகோதரர்கள் உள்ளிட்டோர்தான். அதேநேரத்தில் 'சிவகெங்கை' சீமை தன்னுள் ஏராளமான அவிழ்க்கப்படாத மர்மங்களையும் இன்னும் கொண்டிருக்கிறது.
'மர்ம தேசமான' சிவெங்கை சீமையின் வரலாற்றில் அறிய முடியாத பக்கங்கள்:
வெள்ளச்சி நாச்சியார் கைக்குழந்தையா?
ஆங்கிலேயருடனான யுத்தத்தில் 25.6.1772-ல் காளையார்கோவில் யுத்தத்தில் மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார். முத்துவடுகநாதரின் மரணத்தைத் தொடர்ந்து "கைக்குழந்தையான வெள்ளச்சி நாச்சியாரை முதுகில் கட்டிக் கொண்டு மருது சகோதரர்களுடன்" நாட்டை விட்டு வெளியேறினார் ராணி வேலுநாச்சியார். 7 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் மருது சகோதரர்கள் தலைமையில் ராணி வேலுநாச்சியார் சிவகெங்கை சீமையை மீட்டார்" என்பதுதான் நாம் பொதுவாக அறியப்படும் செய்தி. ஆனால் முத்துவநடுகநாதர் மறைவின் போது வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சி நாச்சியார் சிறுமியாக இருந்தார்; இல்லை கருவில்தான் இருந்தார் என்கிற மாறுபட்ட தகவல்களும் சில வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீமான் தற்போது கூட, கைக்குழந்தையாக இருந்த வெள்ளச்சி நாச்சியாரை முதுகில் சுமந்து கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்றார் வேலுநாச்சியார் என்கிறார்.

வேலுநாச்சியாருக்கு உதவியது யார்?
வேலுநாச்சியாரின் வீர வரலாற்றில் ஹைதர் அலியின் படை உதவி இன்றைக்கும் பேசப்படுகிறது. ஆனால் 'லாவகமாக' அன்றைக்கு ஆங்கிலேயருக்கு எதிராக ஆங்கிலேயரின் ஈரக் குலைகளை நடுங்க வைத்த புரட்சிக் கூட்டணியை உருவாக்கிய விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்ற பாளையக்காரரைப் பற்றி பேசுவது தவிர்க்கப்படுகிறது. விருப்பாட்சி கோபால் நாயக்கர் இல்லை என்றால் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் இல்லை என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகிறது

சிவகெங்கை சீமை மீட்புக்குப் பின் என்ன நடந்தது?
1780-ம் ஆண்டு சிவகெங்கை சீமையை உடையாள், மருது சகோதரர்கள், வீரத்தாய் குயிலி உள்ளிட்டோரின் அளப்பரிய தியாகங்களுடன் மீட்டெடுத்தார் வீரமங்கை வேலுநாச்சியார். 1790-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார் வேலுநாச்சியார். இதன் பின்னர் மகள் வெள்ளச்சி நாச்சியாரும் அவரது கணவர் கெளரிவல்லப தேவரும் சிவகெங்கை சீமையை அரசாண்டர். பெயரளவில் ராணி வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார், கெளரிவல்லப தேவர் மன்னர்களாக, ஜமீன்களாக இருந்தாலும் நடைமுறையில் இந்த காலகட்டத்தில் சிவகெங்கையை நிர்வகித்தவர்கள் மருது சகோதரர்கள். இதனால் சிவகெங்கை சீமையில் அவ்வப்போது குழப்பங்களும் கலகமும் நிகழ்ந்த வரலாறும் உண்டு.

மருது சகோதரர்களின் கலகம்
1789-ம் ஆண்டு சின்ன மருது தலைமையிலான படை ராணி வேலுநாச்சியாருக்கு எதிராக கலகம் செய்ய முயன்றது. அப்போது ஆங்கிலேயர் உதவியிடன் ராணி வேலுநாச்சியார்தான் சிவகெங்கை சீமையில் இருந்து சின்ன மருது படையை திண்டுக்கல் நோக்கி பின்வாங்க செய்தார். பின்னர் இருதரப்பும் சமாதானமானது. மன்னர் முத்துவடுகநாதர் காலம் தொடங்கி கெளரிவல்லப தேவர் காலம் வரையில் சிவகெங்கை சீமையின் 'அறியப்பட்ட' நிர்வாக தலைவர்களாக மட்டுமே இருந்தவர்கள் மருது சகோதரர்கள். ஆகையால் இன்றைக்கும் சிவகெங்கை சீமையின் மன்னர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் மருது சகோதரர்கள் பெயர் இடம் பெறவில்லை.
மருது சகோதரர்களின் தலையீட்டால் மகள் வெள்ளச்சி நாச்சியார் திருமணத்தை தாம் விரும்பியபடி நடத்த முடியாமல் போன வேலுநாச்சியார், ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருக்க விரும்பிய சிவகெங்கை சீமை என்பது உள்ளிட்டவை மறைபேசுபொருளாகவே இருந்து வருகிறது.

கட்டபொம்மன் நாயக்கரும் சின்ன மருதுவும்
வடுக வந்தேறி என்றும் கொள்ளைக்காரன் என்றும் இன்று கடுமையாக விமர்சிக்கப்படுகிற பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மு நாயக்கருக்கும் சின்ன மருதுவுக்குமான நட்புறவை அவர்கள் காலத்து ஆங்கிலேய தளபதிகளே விவரித்திருக்கின்றனர். இதனாலேயே பகைமை உருவாகி நட்புறவாக இருந்த ஆங்கிலேயர்களாலே மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர். வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் மறைவுக்குப் பிந்தைய கட்டபொம்மன் - மருது சகோதரர்கள் உறவு ஆழமானது. இப்படி சிவகெங்கை (சிவகங்கை) சீமை இன்றைக்கும் அவிழ்க்க முடியாத ஏராளமான வரலாற்று புதிர்களுடன் மர்ம தேசமாகவே இருந்து வருகிறது.

உதவிய நூல்கள்: Military Reminiscences Colonel James Welsh (கிபி 1830-ல் வெளியானது- ஜேம்ஸ் வேல்ஷ்- மருது சகோதரர்களுடன் நேரடியாக நட்புறவாக இருந்தவர்); சீர்மிகு சிவகங்கை சீமை டாக்டர் எஸ்.எம்.கமால்
-
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications