பராசக்தி படம் காங்கிரஸ் கட்சியினருக்கு ஏன் புரியவில்லை? டெல்லியில் சீறிய சிவகார்த்திகேயன்
டெல்லி: "பராசக்தி" படம் மக்களுக்கு புரிகிறது, ஆனால் காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டும் ஏன் புரியவில்லை என சிவகார்த்திகேயன் ஆவேசமாக பேசியுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் இந்த ஆண்டு பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் அவரது வீட்டில் நடைபெறும் விழாவில் தமிழர் பாரம்பரியம், பண்பாட்டை கொண்டாடும் வகையில் பல முக்கிய தலைவர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், பொதுமக்கள், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். மக்கள் பராசக்தி படத்தை சரியான வகையில் புரிந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் இந்த படத்தை பார்த்தால் அவர்களும் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.
இந்த படத்தில் எந்தவிதமான சர்ச்சை காட்சிகளும் இல்லை. நான் இந்த படத்திற்கு எந்த பிரச்சாரமும் செய்யவில்லை. அதிலும் எனக்கு விருப்பமில்லை. படம் எனக்கே ஒரு கலைப்பயணம். இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications