சென்னைக்குள் ஆறு புதிய மின்சார ரயில்கள்.. ஆவடி வழித்தடத்தில் ரயில்கள் நேர அட்டவணை மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் மார்க்கத்தில் ஆறு புதிய மின்சார ரயில்கள் இன்று முதல் இயங்குகின்றன. இதன் காரணமாக ஆவடி, அரக்கோணம் வழித்தடத்தில் சில மின்சார ரயில்கள் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கியமான போக்குவரத்து என்றால் அது மின்சார ரயில் போக்குவரத்து தான்.. மின்சார ரயிலை நம்பித்தான் பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள்.. மின்சார ரயில்கள் ஒரு நாள் ஓடாவிட்டால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்து போய்விடும்.. சென்னையில் தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்திலும், ஆவடி, திருவள்ளூர் அரக்கோணம் வழித்தடத்திலும், மயிலாப்பூர் வேளச்சேரி வழித்தடத்திலும், திருவொற்றியூர் கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும் மின்சார ரயில்கள் ஓடுகின்றன.. மின்சார ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் ஓடினாலும் மின்சார ரயில்கள் ஓடாத பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் ஓடப்போகின்றன. ஏற்கனவே சென்னையில் அண்ணா சாலை மற்றும் ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று மூன்று முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன.

Six new trains to be operated and the existing timings of some EMU trains had been changed in Chennai

மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களுக்கும் சென்னைக்கு மிகஅவசியமான மற்றும் அத்தியாவசியமான போக்குவரத்தாக மாறி உள்ளது.. இந்நிலையில் சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் வழித்தடத்தில் புதிதாக ஆறு மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு மின்சார ரயில்கள் காரணமாக ஆவடி, திருவள்ளூர் வழித்தடத்தில் பல்வேறு ரயில்கள் நேர அட்டவணை மாறி உள்ளது- அதாவது வழக்கமான நேரத்தை விட ஐந்து நிமிடம் முன்பே கிளம்பும் வகையில் சில ரயில்கள் இருக்கின்றன.. மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Six new trains to be operated and the existing timings of some EMU trains had been changed in Chennai

ஆறு புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படும் நேரங்கள் விவரம் வருமாறு: சென்னை கடற்கரை - திருவள்ளூர் இடையே காலை 6.10க்கு ஒரு ரயில் புறப்படுகிறது. அதேபோல் சென்னை கடற்கரை - ஆவடி இடையே காலை 10.35 க்கு ஒரு ரயில் புறப்படுகிறது. அதேபோல் ஆவடி - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.20க்கு ஒரு ரயில் புறப்படுகிறது.

Six new trains to be operated and the existing timings of some EMU trains had been changed in Chennai

அதேபோல் ஆவடி- சென்ட்ரல் (மூர் மார்க்கெட்) இடையே மாலை 4.20க்கு ஒரு ரயிலும், இரவு 7.15க்கு ஒரு ரயிலும் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதிகாலை நேரத்தை பொறுத்தவரை, ஆவடி- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே அதிகாலை 3 மணிக்கு ஒரு ரயில் புறப்படுகிறது. இதுதவிர மொத்தம் 46 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு காஞ்சிபுரம் சென்னை கடற்கரை ரயில் காலை 6.15க்கு பதில் 6.10க்கு புறப்படும். இரவு 8.20க்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் திருத்தணி ரயில் இரவு 8.10க்கே புறப்படும். இப்படி பல்வேறு ரயில்கள் வழக்கமான ரயில் நேரத்தைவிட ஐந்து நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆவடி திருவள்ளூர் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் நேர மாற்ற அட்டவணை செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+