கிரேனில் இறங்கிய பிரம்மாண்டத்தை கண்டு மலைத்த எடப்பாடி பழனிசாமி! சென்னையில் டிட்டோ ஆம்பூர் சம்பவம்
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டம், ஒருபுறம் பிரம்மாண்டமான வரவேற்புடனும் மறுபுறம் எதிர்பாராத விபத்துடனும் அரங்கேறியிருக்கிறது.. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த இரு சம்பவமும் ஒரே நேரத்தில் நடந்துள்ளன.. .

எடப்பாடி பழனிசாமி
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக, அவரை வரவேற்கும் வகையில் அந்த பகுதியில் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ..
எம்.ஜி.ஆர். நகர் முழுவதும் அதிமுக கொடிகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வருகை தந்தபோது, அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குறிப்பாக, அதிமுக நிர்வாகிகள் சார்பில் ராட்சத கிரேன் உதவியுடன் சுமார் 20 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான மலர் மாலை அவருக்கு அணிவிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகள் அதிர, தொண்டர்களின் விண்ணைப் பிளக்கும் கோஷங்களுக்கு இடையே இந்த மலர் மாலை அணிவிக்கப்பட்ட நிகழ்வு அக்கட்சியினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, கிரேன் மூலம் சுமார் 20 அடிக்கும் மேலான உயரமான மாலை கிரேனில் வந்து இறங்கியது.. இந்த மாலையை மெதுவாக இறக்கி, அதனை எடப்பாடி கழுத்தில் அணிவிக்கப்பட்டதுமே, தொண்டர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் கடுமையாகச் சாடினார்.
கிரேனில் வந்த பிரம்மாண்ட மாலை
எனினும் இந்த இந்த பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒரு சோகமான விபத்து நடந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது.. முன்னாள் எம்.எல்.ஏ. வி.என். ரவி சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலை நெடுகிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
மார்க்கெட் பகுதிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு ராட்சத பேனர், திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண் மீது பேனர் விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்து நிலைதடுமாறினார். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆம்பூர் சம்பவம் நினைவிருக்கா
பாதுகாப்பற்ற முறையில் பேனர்கள் வைக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற ஒரு விபத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆம்பூரிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று கிழிந்து, பைக்கில் சென்ற தந்தை, மகன் மீது விழுந்து பலத்தை காயத்தை அவர்களுக்கு தந்திருந்தது.. அதேபோல இப்போது மீண்டும் சென்னையில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசியல் கட்சிகள், கொண்டாட்டங்களின் பெயரில் வைக்கும் பேனர்களால் இது போன்ற விபத்துக்கள் நேரிடுவது வேதனைக்குரியது...
பிரம்மாண்ட வரவேற்பு, கிரேன் மாலை என அதிமுகவினர் உற்சாகத்தில் மிதந்தாலும், ஒரு பெண் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு சென்றுள்ளது வருத்தமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.. அரசியல் களத்தில் எழுச்சியை ஏற்படுத்த நினைக்கும் அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது...!!
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications