ரயிலில் போறீங்களா? AC ஸ்லீப்பர் கோச்சில் குட் நியூஸ் பாருங்க.. நெல்லை டூ பொதிகை எக்ஸ்பிரஸ் சர்ப்ரைஸ்
சென்னை: தெற்கு ரயில்வே, 2025 ஆகஸ்ட் முதல் முக்கிய விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் (SL) பெட்டிகளை குறைத்து, அதற்குப் பதிலாக மூன்று படுக்கை (3AC) மற்றும் இரண்டு படுக்கை (2AC) AC பெட்டிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது... அதிக வசதிகளை கொண்ட AC பெட்டிகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் இப்படியான அறிவிப்பு வெளியானது.. இது தொடர்பாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரெயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரெயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரெயில் தினசரி சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது.
சென்னை:

அதுபோலவே, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அந்தவகையில், முதல் வகுப்பு ஏசி பெட்டி 1, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி 2, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 5, சாதாரண படுக்கை முன்பதிவு பெட்டிகள் 8, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
AC பெட்டி இணைப்பு
இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயிலில் (வண்டி எண்: 12632) ஆகஸ்ட் 1ம் தேதி முதலும், சென்னையில் இருந்து புறப்படும் ரெயிலில் (12631)) ஆகஸ்ட் 4ம் தேதி முதலும் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று கடந்த வாரம் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.
அந்த அறிவிப்பில் மேலும், "இந்த ரெயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 7ஆக குறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஒரு மூன்றடுக்கு AC பெட்டி சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலமாக, மூன்றடுக்கு AC பெட்டிகள் எண்ணிக்கை 5-ல் இருந்து 6 ஆக அதிகரிக்க உள்ளது.
திடுதிப்பென அறிவிப்பு
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி இயக்கப்படும் அதிவேக ரெயிலில் (12661) வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் புறப்படும் பொதிகை ரெயிலில் (12662) இதேபோல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது.
கடுமையான அதிருப்தி
இது பயணிகள் மத்தியில் கடுமையான அதிர்வலையை உண்டுபண்ணியது.. காரணம், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயிலில் முன்பதிவு தொடங்கிய வேகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடும். சாதாரண படுக்கை பெட்டி எண்ணிக்கையில் ஒன்றை குறைத்து, AC பெட்டி ஒன்றை அதிகரிப்பதால், சாதாரண பெட்டிகள் குறைவதுடன், நடுத்தர பயணிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பு கிளம்பியது..
பயணிகள் வரவேற்பு
அதேபோல, பல்வேறு சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, "நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில், ஆகஸ்ட் முதல் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படும்" என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக, சுற்றறிக்கை ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெட்டிகள் மாற்றும் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கமான பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications