மக்களை குஷிப்படுத்திய திடீர் மழை... அடுத்த சில மணி நேரத்திற்கு.. இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் மழை
சென்னை: இன்று காலை முதலே தலைநகர் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை என மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிக மோசமாகவே இருந்து வந்தது. சென்னை, திருச்சி, சேலம் என மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சதமடித்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் மக்களை குஷிப்படுத்தும் வகையில் இன்று காலை முதலே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர், வளசரவாக்கம், ராமாபுரம், கே கே நகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருச்சி மாநகர் பகுதிகளிலும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்டோன்மன்ட், பொன்மலைப்பட்டி, எடமலைப்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், ஆலங்குடி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குக் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் வரும் காலங்களில் மாநிலத்தில் பல பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications