Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்லிங் ஷாட் முறை! சந்திரயான் 3 நேராக நிலவிற்கு செல்லாமல் பூமியை அத்தனை முறை சுற்றுவது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 3 திட்டம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் அது எப்படி நிலவை சென்று சேரும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் திட்டம்தான் சந்திரயான் திட்டம் 2 முழுமையாக வெற்றிபெறாத நிலையில் தற்போது சந்திரயான் 3 விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கி உள்ளது.

Sling Shot Method: Why do Chandrayaan-3 Rover and Lander systems have to rotate the earth for so many days?

தற்போது சந்திராயன் 3 திட்டத்தில் சந்திராயன் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும்.

இந்தியாவின் ராக்கெட்டுகளில் பாகுபலி ராக்கெட் என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட். இது பூமியின் வெளிவட்டப்பாதை வரை மட்டுமே செல்லும். அதன்பின் பூமியை சுற்றும் வட்டப்பாதையில் ப்ரோபல்ஷன் மாடல் நிறுத்தப்பட்டதும் ராக்கெட்டின் அனைத்து பாகங்களும் தனி தனியாக கழன்று கொள்ளும்.

சரி எப்படி சென்றால் லேண்டர், ரோவரை சுமந்து கொண்டு அப்படியே ப்ரோபல்ஷன் மாடல் நிலவை நோக்கி செல்லுமா என்றாலும் செல்லாது. அது பூமியை பல முறை சுற்றிவிட்டு அதன்பின்தான் நிலவை நோக்கி செல்லும். அதன்படி முதலில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இதை சுமந்து செல்லும். பூமியில் இருந்து கிளம்பி பூமியின் வட்டப்பாதையில் 179 கிமீ தூரத்தில் நிறுத்தப்படும். செல்லும் பாதையில் வரிசையாக ராக்கெட்டின் பாகங்கள் கழன்று கொள்ளும்.

அதன்பின் ப்ரோபல்ஷன் மாடல் அதன் மேலே ரோவர், லேண்டர் இணைக்கப்பட்ட பகுதி மட்டும் வட்டப்பாதையில் இறங்கும். இது பூமியின் வட்டப்பாதையை நீள் வட்டத்தில் சுற்றி சுற்றி 23 நாட்களில் மிக நீண்ட சுற்று வட்டப்பாதையை அடையும். அதாவது முதலில் சின்ன நீள்வட்ட பாதை, அதன்பின் கொஞ்சம் பெருசு, கொஞ்சம் பெருசு என்று சுற்றும்.

இப்படி சுற்ற சுற்ற இதன் வேகம் அதிகரிக்கும். உதாரணமாக உங்களிடம் ஒரு நூல் உள்ளது. அதன் ஒரு பகுதில் சின்ன கல் ஒன்றை கட்டிக்கொள்ளுங்கள். இன்னொரு பகுதியை உங்கள் கையால் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுங்கள். சுற்ற சுற்ற கொஞ்சம் கொஞ்சமாக நூலை விட்டுக்கொண்டே இருங்கள். நூலின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க அந்த கல் சுற்றும் வேகமும் அதிகரிக்கும். அது போலத்தான் இதுவும். பூமியை நீள் வட்ட பாதையில் சுற்றி சுற்றி அதன் வட்டம் அதிகரிக்க அதிகரிக்க இதன் வேகம் அதிகரிக்கும்.

அதன்பின் 23வது நாளில் ப்ரோபல்ஷன் மாடல் செயல்பட்டு நிலவை நோக்கி உந்தப்படும். குறிப்பிட்ட வேகம் அடைந்தவுடன் இது நிலவை நோக்கி தள்ளப்படும். அதோடு நிலவிற்கு மிக அருகில் உள்ள தொலைவிற்கு வந்தவுடன் இந்த மாடல் செயல்படுத்தப்படும். இதன் மூலம் பெரிய அளவில் எரிபொருள் இல்லாமலே இயற்கையை பயன்படுத்தி, நேரடியாக நிலவிற்கு செல்லாமல் சுற்றி சுற்றி செல்ல முடியும். கிட்டத்தட்ட ஸ்லிங் ஷாட்டில் பின்பக்கம் வைத்து அதன்பின் சட்டென விடுவது போல இந்த சந்திரயான் 3 நிலவை நோக்கி செல்லும்.

அதன்பின் 7 நாட்கள் நிலவை நோக்கி இது பயணம் மேற்கொள்ளும். பின் நிலவின் வட்டப்பாதையை அடைந்ததும் 13 நாட்கள் நிலவை சுற்றும். இது இப்படி நிலவை சுற்றும் போது இதன் நீள் வட்டப்பாதையை குறைந்துகொண்டே வரும். அதாவது முன்பு செய்ததற்கு அப்படியே . இப்படி செய்வதன் மூலம் இதன் வேகம் மற்றும் உயரம் குறையும். நிலவில் இருந்து 100 கிமீ தூரத்திற்கு சென்ற பின் இந்த ப்ரோபல்ஷன் மாடல் அப்படியே கழன்று கொள்ளும். லேண்டர் மட்டும் ரோவருடன் அப்படியே இணைந்து நிலவை நோக்கி இறங்கும்.

எங்கே களமிறங்கும்?: நிலவின் தென் துருவப் பகுதியில் ரோவர் தரையிறங்கும். 2 கிமீ வேகத்திற்கும் குறைவாக இது தரையிறங்கும். தரையிறங்கிய பிறகு, லேண்டர் 14 பூமி நாட்களுக்கு (ஒரு சந்திர நாள்) மேற்பரப்பில் பொருட்களை இந்த ரோவர் சேகரிக்கும்.

குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தால்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல்.

எப்போது? எங்கே?: சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார், இருப்பினும் சந்திரனில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்து இது மாறக்கூடும். தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதை இஸ்ரோ மாற்றியமைக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை விண்ணிற்கு அனுப்பும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+