காத்திருப்போர் பட்டியலுக்கு போன காவலர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அதிரடி
சென்னை: போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனமாக இருந்த புகாரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 26 போலீசார் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கஞ்சா, குட்கா, மாவா உட்பட போதை மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த உத்தரவை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படியே சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் , சென்னையில் போதை, புகையிலை பொருட்களின் புழக்கத்தை தடுத்து அதில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனமாக செயல்பட்டதாகவும்,குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் பல்வேறு காவலர்கள் மீது புகார் எழுந்தது.'
இதையடுத்து போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனமாக செயல்பட்டாலோஇ குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாலோ கண்டிப்பாக காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்திருந்தார்.
எச்சரித்ததுடன் மட்டுமின்றி நடவடிக்கையிலும் சந்தீப்ராய் ரத்தோர் இறங்கினார். சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படியே,. 9 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இதர போலீசார் 36 பேர் என மொத்தம் 65 பேர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. அவர்கள் சென்னை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
அவர்களில் 3 இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படுவதற்காக டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களில் 7 சப்-இன்ஸ்பெக்டர்களும், 16 போலீசாரும் நேற்று வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்கள் மீதும் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என தகவல்கள் வெளியாகின
இதற்கிடையில் புகாரில் சிக்கிய சென்னை உளவுப்பிரிவில் பணியாற்றிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 7 போலீசாரும் நேற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆவடி கமிஷனரகத்தில் இதுபோல் போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலில் அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 போலீஸார் ராணிப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர். இதனால் மெத்தனமாக இருந்தாக குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற போலீஸார் கலக்கத்தில் உள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications