போகியும்.. பனியும்.. சென்னையில் முடங்கிய விமான சேவை, பயணிகள் அவதி
சென்னை:சென்னையில் போகிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், அதனால் எழுந்த புகையால் வாகன ஓட்டிகளும், நோயாளிகளும் சிரமத்துக்கு ஆளாகினர். விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போகித்திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மக்கள் எழுந்து தங்கள் வீட்டில் இருந்த பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.
அதனால், நகரம் முழுவதும் ஒரே புகைமூட்டமாக காட்சியளித்தது. சென்னை திருவொற்றியூரில் போகிப் பண்டிகை களைகட்டியது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்த பழைய துணிகள், பாய்கள், தேவையில்லாத பொருட்களை வீட்டு வாசலில் தீ வைத்து எரித்தனர்.

உற்சாக வரவேற்பு
சிறுவர்கள் கையில் மேளத்தை அடித்தபடி போகிப் பண்டிகையைக் கொண்டாடினர். உற்சாக குரல் எழுப்பிய அவர்கள் சுற்றி வந்து போகியை மகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

விமானங்கள் தாமதம்
சென்னையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டதால் ஏற்பட்ட புகை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை, அந்தமானிலிருந்து வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னை-பெங்களூரு, சென்னை-மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

19 விமான சேவை பாதிப்பு
சென்னை விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்திறங்கும் விமானங்கள் பனி மூட்டம், போகி பண்டிகையின் புகை மூட்டம் காரணமாக இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் 19 விமானங்கள் வேறு விமானநிலைங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையில் அதிகாலை 4 மணி முதல் விமானங்கள் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி
கடந்த சில நாட்களாக ஏற்கனவே பனிமூட்டம் இருந்து வந்த நிலையில், தற்போது புகை மூட்டமும் சேர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சாலைகள் முழுக்க புகை மண்டலமாக காட்சி அளித்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

அதிகரிக்கும் காற்று மாசு
கார்களில் சென்றவர்களும் சாலை சரிவர தெரியாததால் அவதியடைந்தனர். சென்னை நகரில் போகி புகையால் காற்றின் மாசுவும் முன் எப்போது இல்லாத அளவு அதிகரித்துள்ளது. காலை 7 மணி அளவில் காற்று மாசு 243 பி.எம்.ஐ. என பதிவாகியுள்ளது.

மாசுபடும் சுற்றுச்சூழல்
இதனிடையே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை தடுக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. சென்னையில் அதிகாரிகள் 30 குழுக்களாக பிரிந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவை எரிக்கப்படுகின்றனவா என்பதை இந்த குழுக்கள் கண்காணித்தன.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications