ஜெயிலர் ஒரு படமா? தங்க பதக்கத்துக்கு பக்கத்துல வருமா? கொண்டாடலாமா? சீறிய பெண்ணியவாதி ஓவியா
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை கூட கொண்டாடுவதைப் பார்த்தால் பெரும் அச்சமாக இருக்கிறது என எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ஓவியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஓவியா எழுதி இருப்பதாவது:
இன்று அமேசான் பிரைமில் ஜெயிலர் படம் பார்த்தேன். முன்பெல்லாம் கதாநாயகர்கள் சொக்கத் தங்கமாக இருப்பார்கள். எதார்த்த சினிமா என்கின்ற பெயரில் அவர்களை துவைத்து கிழித்து காயப் போட்டுக் கொண்டிருந்தோம்.

எம் ஜி ஆர் டூயட், சிவாஜியின் அழுகை என்று விமர்சித்துத் தள்ளிக் கொண்டிருந்தோம். ஆனால் என்ன இது... ?கொள்ளைக்காரனும் கொலைகாரனும் கதாநாயகனாம். ஒரு சிறைத்துறை காவலர் மாபியா கூட்டத் தலைவர் போல...கதையில் எந்தக் காட்சிக்கும் தர்க்கப் பொருத்தம் கிடையவே கிடையாது.
இந்த லட்சணத்தில் தங்கப் பதக்கம் சிவாஜி ரேஞ்சுக்கு ரஜினி பெத்த பிள்ளையையே கொல்கிறாராம். தங்கப் பதக்கம் பக்கத்திலயாவது வரமுடியுமா இந்தப் படம்? ..

"நானாடவில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா"
என்ற பாடல் வரிகளும் பிரமீளாவின் அழுகுரலும் சிவாஜியின் கலங்கிய குரலும் இன்றும் இதயத்திலிருந்து பிரிக்க முடியாதவை.
சரி. இந்தப் படத்தை விடுங்கள். இதைக் கொண்டாடும் ஒரு பெரிய கூட்டத்தை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது. இப்படிப் பட்ட படங்களில் நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேறு...மேலும் காத்திரமான விமர்சனம் எதிர்ப்பு வரவேயில்லை... இவையெல்லாம்தான் நினைக்க நினைக்க பாரமாக இருக்கின்றன.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications