கே.டி.ராகவன் வீடியோ வெளியிட்ட மதனுக்கு வந்தது சிக்கல்.. டிஜிபி, கமிஷனர் ஆபிசில் பியூஸ் மானுஷ் புகார்
சென்னை: கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் புகார் கொடுத்துள்ளார்.
பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இந்த விவகாரத்தை யு டியூபரான மதன் என்பவர்தான் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். ''தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன்'' என்று கே.டி. ராகவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களும் உலா வந்தன. கே.டி.ராகவன் வீடியோ தொடர்பாக அண்ணாமலை மீதும் சில குற்றச்சாட்டுகளை மதன் ரவிச்சந்திரன் கூறி இருந்தார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் பாஜக செல்வாக்கும், அண்ணாமலையின் செல்வாக்கும் அதிகரித்து வந்ததாக தெரிகிறது. எனவே அண்ணாமலை பெயரை டேமேஜ் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ திட்டமிட்டு கிளப்பப்பட்டுள்ளது என்று ஒரு சிலர் கருத்து கூறினார்கள்.
கே.டி. ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்தனர். ''தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். கே.டி. ராகவன் உள்ளிட்ட பாஜக, அதிமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்'' என்று கரூர் எம்.பி ஜோதிமணி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் கொடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களும் உலா வந்தன. கே.டி.ராகவன் வீடியோ தொடர்பாக அண்ணாமலை மீதும் சில குற்றச்சாட்டுகளை மதன் ரவிச்சந்திரன் கூறி இருந்தார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் பாஜக செல்வாக்கும், அண்ணாமலையின் செல்வாக்கும் அதிகரித்து வந்ததாக தெரிகிறது. எனவே அண்ணாமலை பெயரை டேமேஜ் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ திட்டமிட்டு கிளப்பபட்டுள்ளது என்று ஒரு சிலர் கருத்து கூறினார்கள்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பியூஸ் மானுஷ் அளித்துள்ள மனுவில், ' இந்துக்கள் புனிதமாக கருதும் பூஜை அறையில் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த
கே.டி. ராகவன் பாலியல் சேட்டையில் ஈடுபடும் வீடியோவை மதன் ரவிச்சந்திரன் என்பவர் வெளியிட்டு இருந்தார்.
பூஜை அறையில் கே.டி. ராகவனின் செயல் இந்துக்களின் உணர்வை புண்படுத்தும்படியாக செய்து விட்டது. இந்த வீடியோ உண்மை என்னும்பட்சத்தில் கே.டி. ராகவனை கைது செய்ய வேண்டும். இதேபோல் இந்த பாலியல் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனும், இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும்படி செய்துள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications