66 Vs 43..இபிஎஸ்ஸை பின்னுக்குத் தள்ளிய ஓபிஎஸ்! 5 ஆண்டுகளில் செய்யாததை தீடிரென செய்த ஓ.பன்னீர்செல்வம்
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து அடுத்தடுத்து அதிமுகவுக்குள் பல உட்கட்சி அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒருவரையொருவர் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கைப் போர் நடந்து வருகிறது. அதில் உள்ள சில சுவாரசிய சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்த நிலையில் உச்சகட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டதோடு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி கடந்த 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக சட்ட விதிகளின்படி தொண்டர்களே என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர். என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கேபி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கிறேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக சிக்கல்
பின்னர் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ்ஸின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், , ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி அசோகன் உட்பட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார். அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாக மக்களவையில் அதிமுகவுக்கு தற்போதைய நிலையில் ஒரு எம்பி கூட இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அதிரடி
இதனால் சற்றே அதிர்ந்து போனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத வகையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா, தி.நகர் சத்யா, ஆதி ராஜாராம் உள்ளிட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைப்பதாக அனல் காட்டினார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி
இதனால் கடுப்பான எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன், வலசை மஞ்சுளா, வேலூர் சுரேஷ் பாபு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர் உள்ளிட்ட 21 பேரை நீக்குவதாக அதிரடி அறிக்கையினை வெளியிட்டார்.

ஆதரவாளர்கள் நீக்கம்
நான் மட்டும் சும்மாவா இப்ப பாருங்க என எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கர், கீர்த்திகா முனியசாமி, சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், , ரமணா , அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி , கருப்பணன், காமராஜ் , முனியசாமி உள்ளிட்டோர் அந்த பட்டியலில் முக்கியமானவர்கள்.

நீளும் பட்டியல்
இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பு ஆதரவாளர்களை அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், இதுவரை ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் 66 பேரை நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் 43 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில் சத்தம் இல்லாமல் ஒரு வேலையும் செய்திருக்கிறார் ஓபிஎஸ். அணிகள் இணைப்புக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமியை ட்விட்டரில் பாலோ செய்து வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரை அன்பாலோ செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications
