தவெகவை கூட்டணிக்கு வருமாறு சிலர் கெஞ்சுகிறார்கள்! தமிழிசை, வானதியை சொல்கிறாரா செங்கோட்டையன்?
சென்னை: எங்களுடன் கூட்டணியில் இணையுங்கள் என சில கட்சிகள் கெஞ்சி வருகிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தவெக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு புறம் 10 கட்சி கூட்டணி, மறுபுறம் 8 கட்சி கூட்டணி, எங்களோடு கூட்டணி வையுங்கள் என சில கட்சிகள் கெஞ்சுகிறார்கள்.

அந்த இரு கட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு 234 தொகுதிகளிலும் தவெக வெல்லும். விஜய் முதல்வராவார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பேசியதில் சில கட்சிகள் தங்களுடன் கூட்டணி வைக்க கெஞ்சுகின்றன என கூறியிருந்தார். திமுக ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியுடன் வாருங்கள் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதியும் அழைத்திருந்த நிலையில் செங்கோட்டையன் இவ்வாறு கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் செங்கோட்டையன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக காங்கிரஸ் 2 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதில் ஒரு பிரிவு தங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது.
சீனியர் உறுப்பினர்கள் கொண்ட மற்றொரு அணி திமுக கூட்டணிக்கு விரும்புவதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி நிலவுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம், 100 நாள் வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவைகளுக்கு கருத்து கூறாததால் பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்வது பொய்யானது. தவெகவின் கொள்கை எதிரி பாஜக என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு என்னை முதலமைச்சராகும்படி சசிகலா தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து தெரிவித்தார். ஆனால் அப்போது இருந்த பொருளாதார நெருக்கடியால் அந்த வாய்ப்பை வேண்டாம் என நான் கூறிவிட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!











Click it and Unblock the Notifications