விரைவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறார் ஓபிஎஸ்! ஏற்பாடுகளை தொடங்கிய இளைய மகன் ஜெயபிரதீப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்லவிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

Recommended Video

    OPS-EPS இணைகிறார்களா?

    இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர் அங்கு சென்று வழிபாடு நடத்துவார் எனத் தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிகச் செம்மல் என ஆதரவாளர்களால் அழைக்கப்படும் ஓ.பி.எஸ்.சின் இளைய மகன் ஜெய பிரதீப் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

    நீதிமன்ற தீர்ப்பு

    நீதிமன்ற தீர்ப்பு

    அதிமுக பொதுக்குழு வழக்கில் தாம் எதிர்பார்த்த படியே தீர்ப்பு வெளியாகி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார். இந்த உற்சாகத்தோடு தனக்கு துணை நின்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். இன்று மாலை ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ள ஓ.பன்னீர்செல்வம், அடுத்ததாக ஊருக்கு செல்லும் போது முதல் வேலையாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனது குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளார்.

    வன பேச்சியமன் கோவில்

    வன பேச்சியமன் கோவில்

    செண்பகத்தோப்பில் உள்ள வனப் பேச்சியம்மன் கோவில் தான் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு குல தெய்வக் கோவில். இதனால் ஓபிஎஸ் குடும்பத்தினர் தொடர்ந்து அங்கு சென்று வருகின்றனர். ஓ.பன்னூர்செல்வத்தின் இளைய மகனான ஜெயபிரதீப் தனது தந்தைக்காக உருகி உருகி அங்கு பிரார்த்தனைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தந்தையின் வெற்றிக்காக இளையமகன் ஒரு பக்கம் கோவில் கோவிலாக வலம் வந்த நிலையில் மூத்த மகன் ரவீந்தரநாத்தோ டெல்லியில் முகாமிட்டு அரசியல் லாபியில் கவனம் செலுத்தினார்.

    சாவி விவகாரம்

    சாவி விவகாரம்

    அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றி பெற்றதை போல் கட்சியின் அலுவலக சாவி தொடர்பான வழக்கிலும் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது. அதிலும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என மிகுந்த நம்பிக்கையில் காத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதனிடையே பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வெளியாகிய பிறகு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது ஆதரவாளர்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்

    நேர்த்திக்கடன்

    இதனிடையே தந்தைக்காக ஜெயபிரதீப் சில நேர்த்திக்கடன்களை பிரசித்தி பெற்ற கோவில்களில் செய்யவிருக்கிறார் எனக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஜெயபிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+