பாதுகாப்பில்லை! குடும்ப மானம் பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் தான்! செளமியா அன்புமணி சுளீர்
சென்னை: மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக் கூடாது என்ற தன்னம்பிக்கையை நிச்சயமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், குடும்ப மானம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொதுவானது என்பதை இருபாலருக்கும் சமமாக கற்பிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார் செளமியா அன்புமணி.
சென்னை பல்கலைக் கழகத்தில்6-ஆவது சர்வதேச மற்றும் 45வது இந்திய குற்றவியல் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து பசுமை தாயகம் அமைப்பின் சார்பில், சௌமியா அன்புமணி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் சென்னை பல்கலைக் கழகத்தின் குற்றவியல் துறையின் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஸ்டெல்லா மேரி, சமூகவியல் துறையின் தலைவர் முனைவர் சசிதா அவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய செளமியா அன்புமணி," மார்ச் - 8, மகளிர் தின விழாவை நாம் வருடாவருடம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். ஆனாலும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறைவாக இல்லை. மாறாக, புதுவிதமான வன்கொடுமைகள் பெண்கள் மீது நடத்தப்படுகிறது. பன்நெடுங்காலமாகவே பெண்கள் பாதுகாப்பு என்பது பொதுவெளியிலும், கல்விக் கூடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும், ஏன் அவரவர் இல்லங்களில் கூட கேள்விக்குறியாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் கூட அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை. கேலி செய்வது, வக்கிரமாக திட்டுவது, ஏமாற்றுவது, பண மோசடி செய்வது, பிடிக்கவில்லையென்றாலும் கூட பின் தொடருவது போன்ற செய்கைகளால் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளங்களில் வக்கிரமாக வன்மமாக பதிவு செய்யப்படுவதால், மகளிர் பலர் இணையத்தில் பயணிக்கவே பயனப்படுகின்றனர். தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முன்வருவதில்லை.
பெண் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பிரபலமானவர்கள், பெண் தொழில் அதிபர்கள், திரைத் துறையினர், குடும்பத் தலைவிகள் என பலரும் சமூக வலைதளத்தில் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு அஞ்சி, மனநிம்மதியை இழக்கிறார்கள். மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இணையத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள், நேரிடையாக அவர்களுக்கு நடப்பதால் உயிருக்கும், கௌரவத்திற்கும் அஞ்சி பல பெண்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் மற்றவர்களின் பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெறுவதில் மனம் மகிழ்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தில் முடிந்துவிடுகிறது. தங்களை 'அழகி' என மற்றவர் புகழுவதை கேட்பதே அவர்களுக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் தருகிறது. அதில் ஒரு சிலர் வக்கிரமாக திட்டிவிட்டால் மன உளைச்சலும் ஏற்படுகிறது. குறிப்பாக, வன்மமான பேச்சிற்கு பலர் ஆமோதித்து கருத்துகளை பதிவிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இணையத்தில் பயணிப்பவர்கள் பலர் தங்கள் அடையாளங்களை மறைத்து, போலி முகவரி, போலி புகைப்படங்கள் கொடுத்து, பெண்கள் பலரை ஏமாற்றுகின்றனர். கும்பலாக தவறு செய்யும் போது, முகம் தெரிவதில்லை. அது போல, இணையத்தில் உண்மை முகம் தெரியாததால், குற்றம் செய்பவர்களுக்கு அதுவே மிகப்பெரிய பலமாக, ஆயுதமாக அமைந்துவிடுகிறது.
இதற்குத் தீர்வு என்னவென்றால், முதலில் நம் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் நம்பிக்கையும், தைரியத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். எவ்வாறு புகையிலைக்கும், மதுவுக்கும், போதை பொருளுக்கும் "வேண்டாம்" என்று சொல்வதைப்போல, மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக் கூடாது என்ற தன்னம்பிக்கையை நிச்சயமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். குடும்ப மானம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொதுவானது என்பதை இருபாலருக்கும் சமமாக கற்பிக்கப்பட வேண்டும்.
குடும்பமும், சட்டமும், காவல்துறையும், நீதித்துறையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கும் பாதுகாப்பாக, அரணாக எல்லா காலகட்டத்திலும் துணை நிற்க வேண்டும். 2000ஆம் ஆண்டு இணையத்தில் ஏற்படும் பொருளாதார குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் தனிச்சட்டம் இயற்றப்பட்டது. அதே போல 1986-ல் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் அச்சு ஊடகங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டங்களும் இந்தியாவில் இயற்றப்பட்டன. ஆனால், காலங்கள் மாறும்போது, புது சட்டங்கள் காலத்திற்கேற்றாற்போல மாற்றங்களுடன் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆபாச சித்தரிப்புகளை உடனடியாக இணையத்திலிருந்து அகற்ற வழிவகை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிராக ஏற்படும் இணைய குற்றங்களை ஆராய மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இணைய குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் வேண்டும். மகளிர் நீதிமன்றங்கள், போக்சோ நீதிமன்றங்கள் போல சைபர் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். பல இணைய பொதுவெளி தளங்கள் வெளிநாடுகளில் இருப்பதால், உலகளாவிய பொதுவான சட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும்" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications