அப்பா "அந்த" பக்கம்.. மகன் "இந்த" பக்கம்.. ஜெய பிரதீப் குறி வைப்பது "இங்கு"தானாமே.. என்ன காரணம்..?
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கம்பம் தொகுதியில் போட்டியிட போவதாக தெரிகிறது
சென்னை: ஒரு மகனை டெல்லிக்கு அனுப்பிவைத்துவிட்ட நிலையில், 2வது மகனையும் அரசியலில் ஈடுபடுத்தும் முயற்சியில் ஓபிஎஸ் இறங்கி வருவதாக கூறப்படுகிறது.. இதையொட்டி, சட்டசபை தேர்தலிலும் அவரது கவனம் குவிந்து வருவதாக தெரிகிறது.
துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, எடப்பாடியாருடன் அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தி கொண்டும், இணக்கமான போக்கை கையாளாகாமலும், ஏகப்பட்ட பிரஷர்களை தந்தும் இந்த 4 வருடங்களை கழித்தார்..
இப்போதுகூட தனி விளம்பரம் தந்து கொண்டிருந்த ஓபிஎஸ் கடந்த 2 நாட்களாகத்தான் சுமூக போக்குக்கு வந்துள்ளார்.

சசிகலா
இன்னொரு பக்கம் சசிகலாவின் வருகை குறித்து இதுவரை மவுனம் காத்தும் வருகிறார்.. அவருக்கு ஆதரவாகவும், உள்ளடி வேலைகள் சிலவற்றை பார்த்து வந்ததாகவும், இதன்காரணமாகவே அதிருப்திக்கு உண்டான பிரதமர் மோடி, முதல்வரை மட்டும் தனியாக சந்தித்து பேசி ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

போட்டி
இப்படி இருதரப்பு விவகாரங்கள் இருந்தாலும், ஓபிஎஸ் தன்னுடைய இளைய மகனை முன்னிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.. இந்த முறை நடக்க போகும் தேர்தலில் போட்டியிட இளையமகன் ஜெய பிரதீப்புக்கு வாய்ப்பு வாங்கி தருவதாகவும் தெரிகிறது.. அதிலும், தன்னுடைய குடும்ப, சமூக செல்வாக்குமிக்க தொகுதியில் மகனை களமிறக்க முடிவு செய்துள்ளார்.

ட்வீட்
"மனிதாபிமான" என்ற ஒரு வார்த்தையை இணைத்து கொண்டு சசிகலாவுக்காக இவர் பதிவிட்ட ட்வீட்டின் முழு அர்த்தம் இதுவரை நமக்கு விளங்கவில்லை என்றாலும், அரசிலுக்கான அச்சாரமாக அதை எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது.. இப்போதுவரை அது சம்பந்தமாக கட்சி தலைமை எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேறு விஷயம்.

விளம்பரங்கள்
அதுமட்டுமில்லை, எப்போதுமே ஓபிஎஸ்-ன் நிகழ்ச்சிகள், அவர் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள், போன்றவற்றை முன்னின்று கவனித்து வருவது ஜெயபிரதீப்தான்.. அந்த வகையில் அரசியல் அனுபவம் என்பது இவருக்கு பல வகைகளில் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.. தொகுதியிலும் நல்ல அறிமுகம் உள்ளது.. இதனால் ஜெய பிரதீப்பை கம்பம் தொகுதியில் களமிறக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றனவாம்..

சமுதாய வாக்கு
இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. பன்னீர் செல்வம் மாமனார் ஊர் இந்த தொகுதியில்தான் உள்ளது.. ஜெய பிரதீப்பின் மாமனாரும் இதேதான்.. அதனால் சமுதாய வாக்குகள் சுற்றுவட்டாரம் முழுவதும் நிரம்பி தளும்புகின்றன.. சமீபத்தில் அதிமுக உத்தேச பட்டியல் ஒன்று வெளியிட்டது.. அதில், ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.. போடியாக இருந்தாலும் சரி, கம்பமாக இருந்தாலும், இவர்கள் 2 பேரையுமே சமூக வாக்குகளும், செய்து தந்த நலத்திட்ட உதவிகளும் கை கொடுக்கும் என்பதே உண்மை..!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications