மொத்தம் 18 ஜாதி அமைப்புகள்.. "செம கவனிப்புடன்" ஹோட்டலில் ரூம் போட்டு.. ஆலோசித்த ராவ்.. என்னாக போகுதோ
புதுக்கட்சியை ராம்மோகன் ராவ் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: 18 ஜாதி அமைப்பு நிர்வாகிகளை அழைத்து வந்து, ஹோட்டலில் ரூம் போட்டு.. மிக முக்கியமான ஆலோசனையை நடத்தினாராம் ராம்மோகன்ராவ்!
தமிழக அரசின் தலைமை செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் ராம்மோகன் ராவ்... ஜெயலலிதாவுக்கு பிடித்தமான அதிகாரிகளில் இவர் முதன்மையானவர்... இவர் நேர்மையான முறையில் தலைமை செயலாளர் பதவியை அடையவில்லை என்று இவர்மீது குற்றச்சாட்டு உண்டு.
ஜெயலலிதா மரணமடைந்த போது அவரின் இறுதிச்சடங்குகளை அரசு சார்பில் முன்னின்று மேற்கொண்டவர். இதற்கடுத்துதான், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்றால் அது ராம் மோகன் ராவ் வீடு தான். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.

சுற்றுப்பயணம்
இதையடுத்து, தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் சார்ந்த தெலுங்கு பேசு மக்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்..ஆர்எம்ஆர் பேரவை என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.. இவர் ஏற்கனவே ஆந்திராவில் பவன் கல்யான் நடத்தும் ஜனசேனா கட்சிக்கு ஆலோசகராக இருந்து வரும் நிலையில், மற்றொரு செய்தி இவரை பற்றி கசிந்துள்ளது.

ஜாதி அமைப்புகள்
ஒரு தனிக்கட்சி துவங்க ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கிறாராம்.. சமீபத்தில் இவர் கோவை வந்துள்ளர்.. அப்போது 18 ஜாதி அமைப்பு நிர்வாகிகளை அழைத்து ரகசிய ஆலோசனையும் நடத்தினாராம்... காந்திபுரத்தில் ஒரு ஹோட்டலில் இந்த ஆலோசனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஆளுங்கட்சிக்கு எதிரான அணியை திரட்டி தனிக்கட்சி துவங்குவதாக ஆலோசனை செய்யப்பட்டதாம்.

நிர்வாகிகள்
அத்துடன், வந்திருந்த நிர்வாகிகளுக்கு செம "கவனிப்பு" நடந்துள்ளது.. இதைதவிர, தேவையானதை செய்து தர்றேன் என்றும் உறுதி தந்தாராம்.. இந்த தகவல் உண்மையா இல்லையா என்று தெரியாவிட்டாலும், இதிலிருந்து 2 விஷயங்கள் புலப்படுகிறது.. ஒன்று, கட்சி துவங்கும் அளவுக்கு ஒரு அதிகாரியிடம் எப்படி இவ்வளவு பணம் இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது.

கொங்கு மண்டலம்
மற்றொன்று கொங்கு மண்டலத்தை தன் பிடியில் வைத்திருக்கும் அதிமுகவுக்கு, சற்று லேசான கலக்கமும் சூழ்ந்துள்ளது. விடும்.. ஏற்கனவே ரெயிடுக்கு பிறகு ஆளும் தரப்பு மீது கடுமையான கோபத்தில் ராம்மோகன்ராவ் இருக்கும்போது, கொங்குவை அவர் வட்டமடித்து கொண்டு வருவது கவனிக்கத்தக்க விஷயமாகும்!
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications