வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தாதீங்க.. இப்படித்தான் ஆகும்.. தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன காரணம்!
சென்னை: வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய கிழமைகளில் தேர்தல் நடத்தக் கூடாது என தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலுமே குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

தென் சென்னை தொகுதியில் இந்த முறை 54.27% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்நிலையில், தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைவது என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லை, அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய ஒன்றுதான். தேர்தலில் மக்களை வாக்களிக்க வைப்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தல் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் சரிபார்க்கவேண்டும். இல்லையென்றால் விளம்பரம் செய்தும் எந்த பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 % வாக்குகளை பதிவு செய்யலாம்" என்றார்.
மேலும், சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது பற்றி பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை என நினைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக்கூடாது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயரலாம் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications