குஜராத்தை விட.. சென்னை மக்கள் தான் நன்கு படித்தவர்கள்.. அஸ்வினிடம் கூறிய ரவீந்திர ஜடேஜா
சென்னை: ‛‛குஜராத்தை விட சென்னை உள்பட தெற்கு பகுதி மக்கள் நன்கு படித்தவர்கள். கல்வியறிவு மிக்கவர்கள். இதனால் சென்னை அணிக்கு தேர்வானதுமே எப்படி மற்றவர்களுடன் பேசப்போகிறேன்'' என்ற பயம் இருந்ததாக சிஎஸ்கே அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினிடம் கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடி வருகிறார். முதல் சில போட்டிகளை தவிர சிஎஸ்கே அணி எம்எஸ் தோனி தலைமையில் இந்த முறை களமிறங்கியது.

சென்னை அணிக்கு இந்த சீசன் சரியாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்தது. 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 பாயிண்ட்டுகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இந்நிலையில் தான் சென்னை அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அஸ்வின் கேள்வி கேட்க ரவீந்திர ஜடேஜா அதற்கு பதிலளிக்கிறார். இதில் சென்னையை ஒப்பிடும்போது குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவு தான் என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரவீந்திர ஜடேஜா, ‛‛சென்னை அணிக்கு என்னை எடுத்தவுடன் நான் நினைத்த முதல் விஷயம் சென்னையில் அனைவரும் கல்வியறிவு பெற்றிருப்பார்களே என்பது தான். நான் அவர்களுடன் உரையாடுவதற்கு சிரமப்படுவேன் என்று நினைத்தேன்'' என்றார். இதையடுத்து குறுக்கிட்ட அஸ்வின், ‛‛இதனை யார் உங்களிடம் சொல்லியது?'' என்று கேட்கிறார்.
அதற்கு ஜடேஜா, ‛‛இயல்பாகவே தென்மாநிலங்கள் மற்றும் சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள் என்று எப்போதும் கேள்விப்பட்டு இருக்கிறோம். இது வெளிப்படையானது. தென்பகுதி மக்கள் கல்வியறிவு மிக்கவர்கள். இதனை ஒப்பிடும்போதும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போதும் குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவு தான். இதனால் சென்னை வந்தபோது இங்கிருக்கும் அனைவரும் படித்திருப்பார்களே என்று நினைத்தேன்'' என்றார்.
அப்போது அஸ்வின், ‛‛முதலில் விரும்பவில்லை.. அப்படித்தானே?'' என்று கேள்வி கேட்டார். அதாவது சென்னையை விரும்பவில்லை என்ற தொனியில் அஸ்வினின் கேள்வி இருந்தது. அதற்கு ஜடேஜா, ‛‛இல்லை இல்லை.. நான் சென்னையில் ரொம்ப காலம் விளையாடி இருக்கிறேன். தங்கியிருக்கிறேன். சென்னை மக்களிடம் இருக்கும் பணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வெற்றியோ, தோல்வியோ, அவர்கள் எப்போதும் உங்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளமாட்டார்கள். சில மாநிலங்களில் அப்படியான சூழல் இல்லை. ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். மேலும் சிஎஸ்கேவில் என்னுடைய முதல் பயம் என்பது எப்படி நான் மற்றவர்களுடன் பேசப்போகிறேன். ஆனால் இங்குள்ள மக்கள் பணிவானவர்கள். தாங்கள் தான் பெரியவர்கள் என்று காட்டிக்கொள்வது இல்லை'' என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications