எங்க ஊரில் கூட இப்படி இல்லீங்க.. சென்னை மெட்ரோவை பார்த்து வியந்த தென்கொரிய சுற்றுலாப் பயணிகள்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த தென் கொரியாவை சேர்ந்த குடும்பம், மெட்ரோவில் உள்ள வசதிகளை பாராட்டி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களை பார்க்கும் போதும் தென் கொரிய தலைநகர் சியோலுக்கும் இதற்கும் எந்த வேறுபாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ரீதியில் கூறியுள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கடந்த ... ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில்கள் முதன் முதலில் ஓடத்தொடங்கின. தற்போது புளூ, கிரீன் என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புளூ லைனில் விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும் பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில்
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடம் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில்களில் வசதிகளும் சரி, மெட்ரோ ரயில் நிலையங்களும் சரி ஹைடெக் வசதிகளுடன் உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் விமான நிலையத்தை மிஞ்சும் அளவுக்கு உள்ளது என சொல்லும் அளவுக்கு மேம்பட்ட வசதிகளுடன் உள்ளது.
சியோல் நகரமா இல்லை சென்னையா
சென்னைக்கு வரும் வெளியூர் மக்கள் முன்பெல்லாம் கட்டாயம் மெரினா கடற்கரையை பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று வருவார்கள். தற்போது அந்த லிஸ்டில் சென்னை மெட்ரோவும் இணைந்துவிட்டது என சொல்லும் அளவுக்கு மெட்ரோ ரயில்கள் சென்னையின் பேவரைட் இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது. தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட சென்னை மெட்ரோவில் ஜாலியாக ஒரு ரைடு சென்றுவிட்டு பார்த்துவிட்டு செல்லும் அளவுக்கு மெட்ரோ ரயில்கள் உள்ளன.
இந்த நிலையில்தான், தென்கொரியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்னைக்கு வந்த நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துவிட்டு வியந்து பாராட்டியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சென்னை சைதாபேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்ற தென்கொரிய சுற்றுலாப் பயணிகள் இது சியோல் நகரமா இல்லை சென்னையா என்று வியந்து பேசுகிறார்கள்.
https://twitter.com/i/status/1905467694276587958சுத்தமாக பராமரிக்கப்படுவதாக பாராட்டு
மேலும் சென்னை மெட்ரோவில் உள்ள டிக்கெட் புக்கிங் வசதி கொரியாவில் உள்ளதை விட எளிதாக உள்ளதாகவும் சுத்தமாக பராமரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். தங்கள் சொந்த ஊரில் பயணம் செய்வது போன்ற ஒரு உணர்வை சென்னை மெட்ரோ தருகிறது எனவும் கொரியாவை மிஸ் பண்ணுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டால் மீண்டும் சென்னை மெட்ரோவிற்கு வருவேன் எனவும் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தென்கொரிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி, சென்னை மெட்ரோ ரயில்களை வியந்து பாராட்டியிருப்பது உண்மையாகவே மகிழ்ச்சி தருவதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications