முதலமைச்சரின் குட்புக்கில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஐபிஎஸ்! சுதந்திர தின விழாவில் சிறப்பு பதக்கம்!
சென்னை: போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காக தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஐபிஎஸ் க்கு சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அரசாணை எண் 411, உள்( மிக)த் துறை, நாள் 03.08.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க்கின் சீரிய பணியை அங்கீகரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த "சிறப்பு பதக்கம்" தனி நேர்வாக வழங்கப்படுகிறது.
அஸ்ரா கர்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், (NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications