கவனிச்சீங்களா.. "அந்த" மாற்றம்.. தெற்கே களமிறங்கும் "பெரும் தலைகள்" அதிமுக கோட்டையில் திமுக வியூகம்
சென்னை: கவனித்தீர்களோ இல்லையோ.. வழக்கத்தை விட வித்தியாசமாக இந்த முறை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேட்பாளர் பட்டியலை அறிவிக்க ஆரம்பித்தார் ஸ்டாலின்.
வழக்கமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆரம்பித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்று முடிப்பது திமுக வேட்பாளர் பட்டியல் மரபு. அது இந்த முறை மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, திமுகவில் தென் மண்டலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு மறுபடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களது தொகுதிகளில் களம் இறங்குகிறார்கள்.

நாகர்கோவில் தொகுதி
நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இங்கு பாஜகவை நேரடியாக எதிர்கொள்கிறது திமுக. திருநெல்வேலியில் லட்சுமணன் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் மேயர் ஆகும். எனவே மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் உள்ளவர்.

ராதாபுரம்
ராதாபுரம் தொகுதியில் அப்பாவு மறுபடி திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையைவிட 49 வாக்குகள் மட்டும் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். எனவே இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடி இருந்தார். இந்த வழக்கில், இதுவரை, தீர்ப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் மறுபடி அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி
அம்பாசமுத்திரத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவர் அந்த சுற்று வட்டார பகுதியில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகும். ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார். சமீபத்தில் ஆலடி அருணா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்ததபோது சில சர்ச்சைகள் எழுந்தன. எனவே அவருக்கு சீட்டு வழங்கப்படுமா இல்லையா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரை களமிறங்கியுள்ளனர். ஆக மொத்தம் மக்களிடம் நன்கு அறிமுகமாகிய சீனியர்களை தென் மாவட்டங்களில் களமிறக்கியுள்ளது திமுக. அதிமுக கோட்டையாக பார்க்கப்படும் தென் மாவட்டங்களில் இந்த முறை அதிக தொகுதிகளை வெல்ல திமுக உறுதியாக இருக்கிறது என்பதை சீனியர்களுக்கு வழங்கியுள்ள வாய்ப்பை வைத்து பார்க்கும்போது தெரிகிறது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications