சென்னை பீச் - தாம்பரம் மின்சார ரயில்கள்.. புதிய டைம் டேபிள் வெளியிட்ட ரயில்வே! பயணிகள் நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை எக்மோரில் நடைபெறும் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளால் புறநகர் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை குறைப்பால் பயணிகள் திண்டாடும் நிலையில், புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. எந்தெந்தெ நேரங்களில் ரயில்கள் இருமார்க்கத்திலும் புறப்படும் என்பது பற்றிய அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வேதான். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மக்கள் திட்டமிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல ரயில்களையே நம்பியிருக்கிறார்கள்.

மின்சார ரயில் சேவைகள் குறைப்பு
சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையிலான வழித்தடம் இதில் முக்கியமானதாக உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள மிக முக்கிய ரயில் நிலையமான எழும்பூரில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20-ம் தேதி முதல் பிளாட்பார்ம் 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நடைமேடை 5, 6-ல் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 204 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு, 164 ரயில் சேவைகளாக இயக்கப்பட்டது.
அலைமோதும் பயணிகள் கூட்டம்
ரயில் சேவை குறைக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் அல்லோலப்படும் நிலை உருவாகியுள்ளது. பீக் நேரங்களில் வரும் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகிறது. ஆங்காங்கே சிக்னல்களுக்கும் நிறுத்தப்படுகிறது. இதனால், பயணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு செல்ல முடிவது இல்லை. அதுபோக பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
புதிய கால அட்டவணை வெளியீடு
ரயில்வே யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் திடீரென இந்த முடிவை எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டு எழுந்தது. பயணிகள் படும் இன்னல்களுக்கு உரிய தீர்வை ரயில்வே உடனடியாக காணவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனிடையே ரயில்வே புதிய கால அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை இந்த சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய கால அட்டவணைப்படியே ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
கடற்கரை → தாம்பரம்
* காலை: 8.55, 10.25, 11.05
* மதியம்: 1.10, 2.25
* இரவு: 9.10, 10.45, 11.05, 11.30, 11.59
தாம்பரம் → செங்கல்பட்டு
* காலை: 4.45, 6.00, 7.15
கடற்கரை → காஞ்சீபுரம்
* காலை: 4.45
* இரவு: 7.30
கடற்கரை → திருமால்பூர்
* காலை: 7.15
* மதியம்: 2.50
* இரவு: 7.55
கடற்கரை → அரக்கோணம்
* மதியம்: 12.45
* மாலை: 6.10, 6.55
தாம்பரம் → செங்கல்பட்டு (ஏ.சி. மின்சார ரயில்)
* காலை: 6.50
செங்கல்பட்டு - கடற்கரை வழித்தட மின்சார ரயில்கள்
செங்கல்பட்டு → கடற்கரை
* காலை: 4.00, 4.30, 4.50, 5.25, 5.55, 6.40, 6.55, 7.15, 8.25, 8.35, 9.20, 10.40, 11.00, 11.30
* மதியம்: 12.00, 1.10, 1.45, 2.20, 3.00
* மாலை: 4.20, 4.55, 5.30, 6.00, 6.15, 6.40
* இரவு: 7.10, 7.35, 7.50, 8.20, 9.15, 10.20, 11.00
தாம்பரம் → கடற்கரை
* காலை: 3.30, 4.00, 4.30, 7.35, 9.15
* மதியம் / மாலை: 1.50, 3.05, 4.20, 5.10
செங்கல்பட்டு → தாம்பரம்
* காலை: 7.30
* இரவு: 8.10
காஞ்சீபுரம் → கடற்கரை
* காலை: 6.10, 9.30
அரக்கோணம் → கடற்கரை
* காலை: 4.40, 7.30 (செமி பாஸ்ட்)
* மாலை: 5.15
திருமால்பூர் → கடற்கரை
* காலை: 7.00 (விரைவு), 11.05
* இரவு: 8.00
செங்கல்பட்டு → எழும்பூர்
* காலை: 7.40, 8.05, 8.45 (செமி பாஸ்ட் ரயில்கள்)
செங்கல்பட்டு → கடற்கரை (ஏ.சி. மின்சார ரயில்)
* காலை: 7.50
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications