பயணிகளே! கவனம்! இன்று முதல் "மலைக்கோட்டை, பல்லவன், வைகை, மன்னை" எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!
சென்னை: மலைக்கோட்டை, பல்லவன், வைகை, மன்னை விரைவு ரயில்கள் இன்று முதல் நவம்பர் 3-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போா்ட்) அதிவிரைவு ரயிலானது (12653) நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மன்னாா்குடி மன்னை விரைவு ரயிலானது (16179) நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 க்குப் புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது (16159) வரும் நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 க்குப் புறப்படும்.
காரைக்குடி - சென்னை எழும்பூா்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது ( 12605, 12606) செவ்வாய்க்கிழமை (அக்.31) தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மாலை 4.15 க்குப் புறப்படும்.
மதுரை - சென்னை எழும்பூா் - மதுரை வைகை அதிவிரைவு ரயில்களானது (12635, 12636) செவ்வாய்க்கிழமை (அக்.31) தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.20 க்குப் புறப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications