தண்ணீர்.. சென்னை ரயில்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை தெரியுமா? மலைக்க வைத்த விவரம்
சென்னை: சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் இன்றுவரை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் மூலம் ஒரு நாளைக்கு 90.56 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது..
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பேசின் பிரிட்ஜ் பனிமனையில் சுமார் 45 ரயில்களை பராமரிக்க ஒரு நாளைக்கு 51.72 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 38.11 லட்சம் லிட்டர் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது. 13.61 லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீர் மற்றும் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையம் பராமரிப்பு மற்றும் ரயில் பெட்டியில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு நாள் ஒன்றுக்கு 11.63 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 0.85 லட்சம் லிட்டர் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் மற்றும் லாரிகள் மூலம் தினமும் 10.77 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை புறநகர் முனையத்தில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையை சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் முழுமையாக பூர்த்தி செய்து வருகிறது.
இதேபோல, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 23.70 லட்சம் லிட்டர் தேவை உள்ளது, அதில் 5 லட்சம் லிட்டர் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது மற்றும் 18.70 லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.
மேற்கூறியவற்றில் இன்றுவரை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதும், சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் மூலம் ஒரு நாளைக்கு 90.56 லட்சம் லிட்டர் தண்ணீரின் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பேசின் பிரிட்ஜ் மற்றும் கோபால்சாமி நகர் பணிமனையில் பராமரிக்கப்படும் அனைத்து ரயில்களும் மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டு, தினசரி பராமரிப்பின்போது பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து கடந்து செல்லும் அனைத்து ரயில்களுக்கும் தேவையான தண்ணீர் காட்பாடி அல்லது ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயான ரயில்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தண்ணீருக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications