எழும்பூர் டூ கடற்கரை ரயில் பாதை.. திட்டத்தை மாற்றும் தெற்கு ரயில்வே.. நிம்மதி அடைந்த ரயில் பயணிகள்
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரையிலான 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால், 7 மாத காலதிற்கு பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்வதாக அறிவித்த திட்டத்தை நிறுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் புறநகர் மின்சார ரயில்களில் அதிகம் பயணம் செய்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து சென்னை நகருக்குள் பல்வேறு காரணங்களுக்காக தினமும் புறநகர் ரயிலில் வந்து விட்டு செல்லும் பயணிகள் கூட இருக்கிறார்கள். காலை மற்றும் மாலை வேளைகளில் பரபரப்பான நேரங்களில் கிட்டத்தட்ட 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரையிலும் கடற்கரை - வேளேச்சரி வழித்தடத்திலும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை -வேளச்சேரி வழித்தடத்தில் ஐடி நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், தான், கடந்த வாரத்தில் தெற்கு ரயில்வேயில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதாவது, சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை 7 மாதங்களுக்கு நிறுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தற்போது 3 ரயில் வழித்தடங்கள் உள்ளன. இதில் இரண்டு பாதைகளில் மின்சார ரயில்களும் ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 வது வழித்தடம் அமைக்கப்பட இருப்பதாகவும் , நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து இருந்தது. அதாவது, வரும் ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்து இருக்கிறது. ரயில்வே வெளியிட்ட இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சென்னை கடற்கரையில் இருந்து வேளேச்சேரி பறக்கும் ரயிலில் தினமும் அதிக அளவில் பயணம் செய்து வந்தனர். குறிப்பாக சென்னை கோட்டை மற்றும் பார்க் டவுன் ரயில் நிலையங்களில் இருந்து பீக் நேரங்களில் அலுவலகம், பள்ளி, கல்லுரி செல்லும் மாணவ மாணவிகள் என பலருக்கும் ரயில்வேயின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் தான், சென்னை, எழும்பூர் - கடற்கரை வரையிலான 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எனவே, ஜூலை 1 முதல் 7 மாத காலத்திற்கு பறக்கும் ரயில் சேவையை பகுதியாக ரத்து செய்யவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்த நிலையில் திட்டத்தை நிறுத்திட முடிவு செய்துள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications