குளுகுளு வசதி.. சென்னை புறநகர் ரயில்களில் இணைக்கப்படும் ஏசி பெட்டிகள்.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்திருப்பதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் குளுகுளு வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கலாம்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் என்பது நிலவி வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் வாகனங்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு பயணிக்க வேண்டும் என்றால் அதிக நேரம் செலவாகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் வேகமாக பயணிக்கவும் சென்னையில் புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதில் புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்களும், மெட்ரோ ரயில்களில் பல ஆயிரம் மக்களும் பயணம் செய்து வருகின்றனர். சென்னை புறநகர் ரயிலை பொறுத்தமட்டில் அது மின்சார ரயிலாக இயங்கி வருகிறது. சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டமான செங்கல்பட்டையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.
டிக்கெட் கட்டணம் குறைவு, அதோடு செல்ல வேண்டிய இடத்துக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சட்டென செல்லலாம் என்பதால் சென்னை புறநகர் ரயில் சேவை என்பது சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இந்நிலையில் தான் சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கோடை காலங்களில் பொதுவாக சென்னையில் வெப்பம் என்பது அதிகமாக இருக்கும். இதனால் புறநகர் ரயில்களில் பயணிக்கும் ரயில்கள் சிரமத்தை சந்தித்தனர். மேலும் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. தற்போது இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே ஏற்றுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் பச்சை கொடி காட்டியுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில்களுக்கு தேவையான ஏசி பெட்டிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் தெற்கு ரயில்வேறுக்கு 12 ஏசி இஎம்யூ பெட்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஏசி பெட்டிகள் முதற்கட்டமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களில் இணைக்கப்பட உள்ளது. இதனால் சென்னை புறநகர் ரயிலை பயன்படுத்தும் மக்கள் இனி குளுகுளு வசதி கொண்ட ஏசி பெட்டிகளில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications