முத்துநகருக்கு முத்தான அறிவிப்பு.. பயணிகளோட கஷ்டம் இப்போதாவது கேட்டுச்சே.. ரயில் பயணிகள் குஷி
சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடிக்கு இந்த ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுவதால் ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட முடியாத அளவுக்கு இந்த ரயில் நிரம்பி வழியும். இந்த சூழலில்தான் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்றை தெற்கு ரயில்வே ஏற்றுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் சொந்த ஊருக்கு பயணம் செய்வது வழக்கம். இதனால், சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்: பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு என்பதால் ரயில் பயணத்தையே பயணிகள் பெரிதும் விரும்புவார்கள். ஆனால், ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைப்பது இல்லை. முன்பதிவு தொடங்கிய சில நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அதிலும் தூத்துக்குடிக்கு சென்னையில் இருந்து ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.
முன்பதிவில்லா பெட்டி: முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே தூத்துக்குடிக்கு இயக்கப்படுவதால், தூத்துக்குடி சுற்று வட்டார பகுதி மக்கள் இந்த ரயிலையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள். முன்பதிவு டிக்கெட்டுகளும் கிடைக்காது என்பதால் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவு நெரிசலுடன் இந்த ரயிலில் பயணிகள் பயணம் செய்வதை காண முடியும்.
என்னங்க சொல்றீங்க..! 10 செகண்டில் 3 நாடுகளுக்கு போயிடலாம்.. எந்த நாட்டில் இருந்து தெரியுமா?
பயணிகள் கோரிக்கை: பெரும்பாலான நாட்களில் பொதுப்பெட்டிகளில் கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 21 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 4 பொதுப் பெட்டிகள் உள்ளன. ஆனால் இடையில் இது 3 பெட்டிகளாக குறைக்கப்பட்டு, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி எண்ணிக்கை 4-ஆக அதிகரிக்கப்பட்டது. முத்துநகர் விரைவு ரயிலில் பொது பெட்டிகளில் பயணிகள் அமர்ந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருப்பதால் பொதுப்பெட்டியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
20 ஆம் தேதி முதல்: பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்றுள்ள ரயில்வே நிர்வாகம் முத்து நகர் விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் 20 ஆம் தேதி முதல் முத்துநகர் விரைவு ரயிலில் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை 4-ஆக அதிகரிக்கப்படும். இதற்கு பதிலாக 3-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் ஒரு பெட்டி குறைக்கப்படுகிறது.
பயணிகள் மகிழ்ச்சி: தூத்துக்குடி- சென்னை முத்துநகர் ரயிலில் இந்த மாற்றம் வருகிற 20-ம் தேதியில் இருந்தும், சென்னை - தூத்துக்குடி முத்துநகர் ரயிலில் 21-ம் தேதி முதலும் நடைமுறைக்கு வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கபடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பொதுப்பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட பாலக்காடு - நெல்லை பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்கும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications