கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்புக்கா காத்திருங்கீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.. சென்னை மக்களின் முக்கியமான தேவையான கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டபட்ட போதே, அதன் எதிரில் உள்ள தண்டவாளத்தில் ரயில் நிலையத்தை அமைத்திருக்கலாம். இதற்கு ரயில்வேயும் சரி, ஆட்சியில் இருந்த இரண்டு அரசுகளும் சரி சரியான முடிவினை உடனே எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் 2023ம் ஆண்டு டிசம்பரில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போதிலும் ரயில் நிலையம் அமைக்கும் நடவடிக்கை உடனே எடுக்கப்படவில்லை. அதன்பிறகே மேற்கொள்ளப்பட்டது.

இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுஒருபுறம் எனில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறப்பதில் முக்கியப் பிரச்சனை ஒன்று இருக்கிறது. பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதையின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதுதான் அந்த பிரச்சனையாகும்.
ஏனெனில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அருகில உள்ள பிரபல அரசியல் தலைவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதேபோல் இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. மேலும் ரயில்வே எல்லைக்குள் ஆகாய நடைபாதை கடந்து செல்வதால், வடிவமைப்பு மாற்றம் மற்றும் ரயில்வேயின் ஒப்புதலுக்காகவும் சில தாமதங்கள் ஏற்பட்டு வந்தன.
இதனால் ரயில் நிலையத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் ரயில்வே தற்போது முடித்துவிட்ட போதிலும், பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, ஆகாய நடைபாதை கட்டி முடிக்கப்பட்ட பின்னரே ரயில் நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூய்மை சேவை பிரச்சாரத்தை தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே சார்பாக அதாவது, ஆகஸ்டு 1 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை என மூன்று கட்டங்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தூய்மைப் பணிகளில் 28 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 8 டன் குப்பைகளையும், 165 டன் இரும்பு கழிவுகளும் எடுக்கப்பட்டு, அதனை மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, நடைமேடையின் மேற்கூரை அமைக்கும் பணிகள், பிரம்மாண்டான நடைபாதை மேம்பாலம் பணிகள் (Sky walk foot over) தீவிரமாக நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் இறுதி பணிகள் நிறைவடைந்த பின்னர், 2026 ஜனவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
அதேபோல, பறக்கும் ரயில் திட்டம் 2 ஆண்டுகளில் நிறைவடைய போகிறது.. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கையெழுத்து பெற்று, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பாக 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. Chennai one என்ற ஒரு செயலி மூலம் அனைத்து பொதுப்போக்குவரத்திற்கும் டிக்கெட் பெறும் வசதி மிக எளிமையாக உள்ளது. ரயில்வே துறை மூலம் 'சென்னை ஒன்' செயலியை பயன்படுத்தி எத்தனை டிக்கெட் பெற்றுள்ளனர் என கணக்கெடுத்து வருகிறோம்" இவ்வாறு கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications