4வது ரயில் பாதை.. எழும்பூரில் மேஜராக நடந்த மாற்றம்.. தெற்கு ரயில்வே சொன்ன நல்ல செய்தி
சென்னை: சென்னை எழும்பூர் பணிமனையில் முக்கியமான பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் மக்கள் வார இறுதி நாட்களில் கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் எழும்பூர் பணிமனையில் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை வழித்தடம் தான் மிகவும் முக்கியமான மின்சார ரயில் வழித்தடம் ஆகும்.இந்த வழித்தடத்தில் ரயில்கள் ரத்தானால், மொத்த சென்னையும் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஏராளமான மக்கள் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் எத்தனை பேருந்துகளை இயக்கினாலும் அந்த நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் லட்சக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். மின்சார ரயில்கள் சில மணி நேரம் ரத்தானால், சாலைகளில் வாகன நெரிசலும் கடுமையாகிவிடும். அந்த அளவிற்கு மிகவும் முக்கியமான வழித்தடமாக தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை வழித்தடம் இருக்கிறது.

இந்நிலையில் பாதுகாப்பான ரயில் சேவைகள் தருவதற்கு பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அந்தவகையில், நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகப்பெரிய அளவில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் ரயில் சேவைகளையே ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இந்நிலையில் வெற்றிகரமாக பணிகளை முடித்துள்ளது ரயில்வே.
இதனிடையே தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் தற்போது பணி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூர் ரெயில் நிலையப் பகுதியில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும். இந்த பணிக்காக நேற்று முன்தினம் கடற்கரை-எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டது.
அதே நேரத்தில் கடற்கரை-எழும்பூர் இடையே மேலும் சில பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 4-வது ரயில் பாதை அமைப்பதற்காக பூங்கா ரெயில் நிலையத்தில் இரு நடைமேம்பாலமும், கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நடைமேம்பாலமும் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சிக்னல், தொலைத்தொடர்பு சார்ந்த பணிகள், ரெயில் மின்சார கம்பி பராமரிப்பு, தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக எழும்பூர் பணிமனையில் முக்கியமான பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.
இந்த வேலைகள் பகல் நேரத்தில் மட்டும் மேற்கொள்ள முடியும் என்பதால் நேற்று முன்தினம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து பணிகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இதன் மூலம் சீரான ரெயில் இயக்கம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே 4வது ரயில் பாதை பணிகள் அக்டோபரில் முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications