3 நாட்கள் லீவு.. நெல்லை, நாகர்கோவில், தென்காசிக்கு.. அடுத்தடுத்து சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே
சென்னை: சுதந்திர தின விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக நெல்லை, தென்காசி, குமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு வரும் 14 ஆம் தேதி சிறப்பு ரயிலை ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
நாட்டின் 79-வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

4 சிறப்பு ரயில்கள்
இதனால் பேருந்து, ரயில்களில் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிபார்த்து இருந்த நிலையில், பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-
சென்ட்ரல் டூ போத்தனூருக்கு சிறப்பு ரயில்
1. வண்டி எண். 06027/06028 சென்னை செண்ட்ரலில் இருந்து போதனூருக்கு இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் போதனூருக்கு மறுநாள் காலை 8.30 மணிக்க்கு சென்றடையும்.
இந்த ரயில், பெரம்பலூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு அதிகாலை 5.10 மணிக்கு வந்து சேரும். 5 நிமிடங்கள் நின்று செல்லும் இந்த ரயில் ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், 17 ஆம் தேதி போதனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு கிளம்பும் ரயில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 8.20 மணிக்கு வந்து சேரும்.
மங்களூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
2. வண்டி எண்: 06041/06042 மங்களூர் ஜங்சனில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் மங்களூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருவனந்த்புரத்திற்கு மறுநாள் காலை 8 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மங்களூருக்கு மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்றடையும்.
நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்
3. வண்டி எண்: 06012/06011 நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாகர்கோவில் ரயில் இருந்து 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்திற்கு புறப்படுகிறது. இரவு 11.15 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், தாம்பரத்திற்கு மறுநாள் காலை 10.55 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி (நள்ளிரவு 12.35 மணிக்கு வந்து 12.40 மணிக்கு கிளம்பும்) கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு அதிகாலை 2.50 மணிக்கு வந்து சேரும். 5 நிமிடங்கள் மதுரையில் நின்று செல்லும் இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு வந்து சேரும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து 18 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 3.30 மணிக்கு புறபப்ட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்றடையும்.
எழும்பூர் - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
4. வண்டி எண் 06089/06090 சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 14 ஆம் தேதி வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், வழியாக திருச்சிக்கு அதிகாலை 3.05 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு காலை 9.15 மணிக்கு வந்து சேரும்.
நெல்லை வழியாக இயக்கப்படும்
நெல்லையில் இருந்து 9.25மணிக்கு புறப்பட்டு தென்காசி வழியாக செங்கோட்டைக்கு காலை 11.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லைக்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். நெல்லையில் 10 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் மதுரைக்கு நள்ளிரவு 12.35 மணிக்கு வந்து சேரும். மதுரையில் இருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக எழும்பூருக்கு திங்கள் கிழமை காலை 9.05 மணிக்கு வந்து சேரும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications