தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இனி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் பயணங்களை மாற்றியமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஏற்கனவே மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10 மற்றும் 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய சில முக்கிய விரைவு ரயில்கள், தற்காலிகமாக மாற்று நிலையங்களிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்
* வண்டி எண் (12661 - பொதிகை எக்ஸ்பிரஸ்) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் இந்த ரயில் வரும் ஏப்ரல் 07 முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் செல்லாது. மேலும் இந்த ரயிலானது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08:05 மணிக்கு புறப்படும்.
* வண்டி எண் (16751 - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்): சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 7 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து இரவு 09:05 மணிக்கு புறப்படும்.
* வண்டி எண் (12759 சார்மினார் எக்ஸ்பிரஸ்) தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் இந்த ரயிலானது வரும் 6 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் இந்த ரயில் சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். பீச் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 06:20 மணிக்கு இந்த ரயில் புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்சார ரயில்கள் ரத்து
இதேபோன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10 மற்றும் 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடை பெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை டூ தாம்பரம்
அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் ரயிலும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரயில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இன்று மற்றும் வருகிற 6, 7, 8 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50, 4.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரி - கடற்கரை
* கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று மற்றும் வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
* இதேபோல் மறுமார்க்கத்தில் இரவு 9.20, 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் பகுதி நேரமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications