திருவனந்தபுரம் - திருச்சி ரூட்டில் ரயில்வே செய்யும் மேஜிக்..130 கிமீ வேகத்தில் பறக்க போகும் ரயில்கள்
சென்னை: திருச்சி - திருவனந்தபுரம் ரூட்டில் ரூ.92.31 கோடி செலவில் தெற்கு ரயில்வே சிக்னல் அமைப்புகளை மேம்படுத்துகிறது. இந்த பணிகள் முடியும்பட்சத்தில் 130 கிமீ வேகத்தில் இந்த ரூட்டில் ரயில்களை இயக்க முடியும். இதன் மூலம் இவ்வழித்தடத்தில் இயக்கப்படும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் - கொல்லம் உள்ளிட்ட விரைவு ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் செல்ல முடியும்.
இந்தியன் ரயில்வே நாடுமுழுக்க உள்ள ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளங்களை மேம்படுத்தி ரயில் சேவைகளை அதிகரிக்கவும், பாதுகாப்பான ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

130 கிமீ வேகம்
அந்த வகையில், தெற்கு ரயில்வே ரூ.92.31 கோடி செலவில் சிக்னல் அமைப்புகளை மேம்படுத்த உள்ளது. திருச்சி - திருவனந்தபுரம் ரூட்டில் இந்த மேம்பாட்டு பணிகளை செய்ய ரயில்வே நிதியை ஒதுக்கியுள்ளது. சிக்னல் மேம்பாட்டு பணிகளால், இந்த வழித்தடத்தில் ரயில்களை 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.
இதனால், பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும் என்பதால் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி (106 கிலோ மீட்டர்) ரூட்டிலும் சிக்னல் அமைப்புகளை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
அனந்தபுரி, கொல்லம் எக்ஸ்பிரஸ்
திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் (96 கி.மீ) இடையேயான பணிகள் 25.7 கோடி செலவிலும், திண்டுக்கல் - திருநெல்வேலி (220 கி.மீ) இடையேயான பணிகள் 37.14 கோடி செலவிலும் திருநெல்வேலி - திருவனந்தபுரம் (142 கி.மீ) 29.42 கோடி செலவிலும் மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு திருவனந்தபுரம் - காயம்குளம் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகள் முடிந்த பிறகு இந்த ரூட்டில் செல்லக்கூடிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் - கொல்லம் உள்ளிட்ட விரைவு ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் செல்ல முடியும். தமிழ்நாடு முழுவதும் உள்ள வழித்தடங்களில் மணிக்கு 130 கி. மீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில், ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளம் அருகே வேலிகள்
சென்னை - அரக்கோணம், சென்னை - குண்டூர் மற்றும் அரக்கோணம் - ஜோலார்பேட்டை ஆகிய பிரிவுகளில் ஏற்கனவே இந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி தண்டவாளத்தை யாரும் கடக்காத வகையில், வேலிகள் அமைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
சென்னை - குண்டூர், சென்னை - அரக்கோணம் ரூட்டில் இந்த வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலிகள் அமைப்பதால் கால்நடைகள் ரயில்களில் அடிபட்டு விபத்தில் சிக்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்படும். அதுபோல, சட்டவிரோதமாக யாரும் தண்டாவள பகுதிக்குள் செல்வது தடுக்கப்படும்.
பயண நேரம் வெகுவாக குறையும்
சென்னை -திருச்சி, ஜோலார்பேட்டை - கோவை ஆகிய வழித்தடங்களில் இதுபோன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரக்கோணம் - ஜோலார்பேட்டை செக்ஷனில் நடைபெறும் சிக்னல்கள் நவீனமயமாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் பயணிகளின் பயண நேரம் வெகுவாக மிச்சப்படும் என்பதால் இந்த பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications