அமித் ஷாவுக்கு பக்கத்தில் விஜய்.. தொடங்கியது தென்மாநில முதல்வர்கள் மாநாடு! புறக்கணித்த ரங்கசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தென் மாநில முதலமைச்சர் மாநாடு சென்னை அருகே கோவளத்தில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, நதிநீர் பிரச்சினை, எல்லை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்துகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடக்காத நிலையில், 3 ஆண்டுக்கு பிறகு தற்போது சென்னை அருகே கோவளத்தில் தொடங்கியது.

Amit Shah DK Shivakumar Mekedatu Dam

31 வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே உள்ள கோவளத்தில் நட்சத்திர விடுதியில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த மாநாட்டில் ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து கோவளத்துக்குச் சென்ற அமித்ஷாவை தமிழக முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.

தொடர்ந்து இரவு விருந்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக தென் மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீட்டு பங்கீடு, மாநிலங்களுக்கு இடையான கூட்டுறவவை மேம்படுத்துவது, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, தொழில்நுட்பம், எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா இடையே தற்போது காவிரி மற்றும் மேகதாது விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு மாநில உறவில் விரிசலை ஏற்பட்டிருக்கும் நிலையில் இரு மாநில முதலமைச்சர்களும் உரைமேடையில் சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருந்து நிலையில் அந்த சூழல் சரியில்லை தற்போதைக்கு வரவேண்டாம் என கூறியிருந்தார் அம்மாநில முதல்வர் டிகே சிவகுமார்.

அதே நேரத்தில் தமிழக தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் தற்போது இங்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும், கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமாரும் தனியாக சந்தித்து பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+