அதென்ன ரவுடி பேபி? வைரம் கடத்துறவங்க ஹீரோவா? என்னா படம் இதெல்லாம்? சவுமியா அன்புமணி வேதனை
சென்னை: ரவுடி பேபியா? கடத்தல்காரர்கள் எல்லாம் நல்லவர்களா, இந்த காலத்தில் படமா எடுக்கிறார்கள், இதிலிருந்து குழந்தைகள் எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா? என சவுமியார் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி கூறியிருப்பதாவது: அந்த காலத்தில் படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் வைரம் கடத்துபவர்கள் கெட்டவர்கள். அவர்களுடன் சண்டையிட்டு அந்த கடத்தல்காரர்களை போலீஸில் ஒப்படைத்து தண்டனை பெற்று தருவார்கள்.

ஆனால் இன்று எடுக்கும் படங்களில் வைரம் கடத்துவோர்தான் ஹீரோவாக இருக்கிறார்கள். எல்லா படங்களிலும் யாரெல்லாம் ரவுடியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ஹீரோ. இப்படித்தான் படங்கள் எடுக்கப்படுகின்றன.
அப்படியிருக்கும் போது பிள்ளைகள் எதை பார்த்து நல்லதை கற்றுக் கொள்வார்கள். நல்லதை நாம்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். என் வீட்டில் குழந்தைகளுக்கும் கருணையுடன் இருக்க வேண்டும், நல்ல குழந்தையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்லிக் கொடுப்போம்.
சில வீடுகளில் "என் குழந்தை பயங்கர ரவுடி" என சிரித்துக் கொண்டே சொல்வார்கள். ஆனால் ரவுடி என்பது தகாத வார்த்தை. அதை வைத்து குழந்தைகளை கொஞ்சுவதா, அப்போதெல்லாம் குழந்தைகளை தங்கமே, வைரமே, வைடூரியமே என கொஞ்சிவிட்டு இப்போது ரவுடி பேபி என கொஞ்சுகிறார்கள்.
அது தவறு. ரவுடி என்பதே தவறான வார்த்தை. அந்த வார்த்தையை போய் குழந்தையை கொஞ்ச பயன்படுத்துவது தவறு. குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும்.
ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம். நம் குழந்தைகளை ஐஏஎஸ், ஐபிஎஸ், வருமான வரித் துறை அதிகாரி, நிறுவனத்தின் சிஇஓ, விவசாயி உள்ளிட்ட துறைகளில் நம் குழந்தைகளை ஜொலிக்க செய்யலாம். ஆனால் அவர்களை நல்ல மனிதர்களாக வளர்ப்பது மிகவும் முக்கியமானது.
குழந்தை பள்ளிக்குச் சென்றுவிட்டு எதை சொன்னாலும் காது கொடுத்து கேளுங்க. ஆசிரியர்களை போல் பெற்றோர்களும் காது கொடுத்து கேளுங்கள் என முக்கிய வேண்டுகோளாக நான் சொல்கிறேன். இவ்வாறு சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவரின் மனைவியும் பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகளுமான சவுமியா, பசுமை தாயகம் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பணிகளை செய்து வருகிறார். மேலும் அந்த அமைப்பின் மூலம் நலத்திட்ட உதவிகளையும் செய்கிறார். இவர் கடந்த ஆண்டு நடந்த தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளருடன் கடுமையான டஃப் கொடுத்து தோல்வி அடைந்தார். தற்போது பள்ளி, கல்லூரிகளில் ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications