எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. சர்வதேச மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையில் சில நாட்கள் முன்னேற்றம் தென்பட்டாலும் பல நாட்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தான் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
எஸ்பிபியின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ!

வாழ்த்து
எஸ்பிபி உடல்நிலை தேற வேண்டும் என்பதற்காக சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் பொதுமக்கள் என பல தரப்பினரும் இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும், எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கூட்டு பிரார்த்தனை
இயக்குனர் பாரதிராஜா ஏற்பாட்டின் பேரில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பல்வேறு திரையுலக பிரபலங்களும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்றனர். தமிழகம் முழுக்க, சிறுவர் சிறுமிகள் என பல்வேறு தரப்பினரும் பாலசுப்பிரமணியம் புகைப்படத்துடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கவலைக்கிடம்
இந்த நிலையில் இரவு 8.30 மணி அளவில் எம்ஜிஎம் மருத்துவமனை ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரானா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

வெளிநாட்டு மருத்துவர்கள்
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச மருத்துவத்துறை நிபுணர்களுடன் எங்களது மருத்துவ குழுவினர் தொடர்பில் இருக்கிறார்கள். தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலையை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications