பால்வெளியின் இதயத்தில்.. தொடங்க போகும் "மாஸ் விசாரணை".. குவிந்த ஆராய்ச்சியாளர்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: பால்வெளியில் மையத்தில் இருந்து வரக்கூடிய கதிர்களை, சிக்னல்களை ஆய்வு செய்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.
பரந்து விரிந்த விண்வெளியில் எங்காவது ஒரு மூலையில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று உலகின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் தொடர் ஆய்வுகளை செய்து வந்தும் இதுவரை அவர்களால் எந்த ஒரு ஏலியனையும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏலியன்கள் என்று வந்துவிட்டாலே உடனே பறக்கும் தட்டும் குறித்தும் மக்கள் பேசுவார்கள். உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.
அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த 2020 வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2021 வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்றுதான்.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில்தான் பால்வெளியின் இதயத்தில்.. அதாவது மையத்தில் ஏலியன்கள் குறித்த தேடுதலை மேற்கொள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அமெரிக்காவில் உள்ள Cornell University ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் இறங்கி உள்ளனர்.
அதன்படி பால்வெளியின் மையத்தில் இருந்து விண்வெளி அண்டத்திற்கு சிக்னல் அனுப்ப முடிவு செய்துள்ளனர். பால்வெளியின் மையத்தில் இருந்து அனுப்பும் சிக்னல் எல்லா பகுதிகளுக்கும் அனுப்ப முடியும். அதோடு மற்ற பகுதிகளில் இருந்து வரும் சிக்னலை இங்கே எளிதாக பெற முடியும் என்பதால் ஏலியன் தேடலை பால்வெளியின் மையத்தில் தேட முடிவு செய்துள்ளனர்.
இந்த தேடுதல் திட்டத்திற்கு பெயர் The Breakthrough Listen Investigation for Periodic Spectral Signals (BLIPSS) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பால்வெளியின் மையத்திற்கு வரும் சிக்னலை பெறுவது, அதை கண்காணிப்பது, பால்வெளியின் மையத்திற்கு சிக்னல் மனிதர்களை பற்றிய சிக்னல்களை அனுப்புவது போன்ற ஆராய்ச்சிகளை இவர்கள் செய்ய உள்ளனர்.
நவீன கணினிகள், ஏற்கனவே அனுப்பப்பட்ட சாட்டிலைட்டுகள், தொலைநோக்கிகள், ரேடியோ சிக்னல் கருவிகள் ஆகியவை மூலம் சிக்னல்களை அனுப்பி சோதனை செய்ய உள்ளனர். ஏற்கனவே விண்வெளியில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்று விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
எம்ஐடி பல்கலை விஞ்ஞானிகளின் கூற்றுப்படி.. தூரத்தில் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் பெரிய வெடிப்பு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் . இது போன்ற வெடிப்புகள் ஏற்படுத்தும் அலைகள், பெரிய ரேடியோ அலைகளை ஏற்படுத்தும். இந்த அலைகள்தான் ஸ்பேசில் பரவி பூமிக்கும் வந்து சேரும். ஆனால் பிரபஞ்சங்களில் ஏற்படும் வெடிப்பு மட்டுமின்றி வேறு விஷயங்களும் இது போன்ற ரேடியோ சிக்னலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது போன்ற சிக்னல்களை fast radio burst அதாவது FRB என்பார்கள். வெடிப்புகள் காரணமாக ஏற்படும் வேகமான ரேடியோ அலைகள்தான் FRB. இதை பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தும் கூட ரெக்கார்ட் செய்ய முடியும். 2007ல் முதலில் FRB கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து பல முறை FRB கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில FRB சிக்னல்கள் 16 நாட்களுக்கு ஒரு முறை பதிவாவதும் கூட குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்தான் தற்போது புதிய FRB சிக்னல் ஒன்று பதிவாகி உள்ளது. இது போன்ற FRB சிக்னல்கள் சில மில்லி செகண்ட் மட்டுமே இருக்கும். அதே சமயம் சூரியன் 3 நாட்களில் வெளிப்படுத்துவதற்கு இணையான ஆற்றலை கொண்டு இருக்கும். ஆனால் பூமிக்கு வரும் போது இதன் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். உதாரணமாக நிலவில் ஒரு போனை வைத்து அதை இங்கிருந்து ரீச் செய்ய முயன்றால் எவ்வளவு குறைவான சிக்னல் இருக்குமோ அவ்வளவு குறைவான ஆற்றலையே பூமிக்கு இந்த ரேடியோ சிக்னல்கள் வரும் போது கொண்டு இருக்கும்.
பிரபஞ்சம் ஒன்றில் இருந்து வரும் FRB சிக்னல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதான் இதுவரை நாம் கண்டுபிடித்ததிலேயே நீண்ட நேரம் இருந்த FRB சிக்னல் ஆகும். அதோடு விட்டு விட்டு இந்த FRB சிக்னல் ஏற்பட்டுள்ளது. Nature என்ற ஆய்வு பக்கத்தில், peer review செய்யப்பட்ட பின் இந்த FRB சிக்னல் பற்றிய ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு FRB 20191221A என்று பெயர் வைத்துள்ளனர். இது அதிகபட்சம் 3 நொடிகள் வரை நீடித்துள்ளது. 0.2 நொடிகளுக்கு ஒரு முறை விட்டு விட்டு FRB சிக்னல் வந்துள்ளது. அதாவது இதய துடுப்பு போலவே வருவது.. போவது.. வருவது போவது என்று இந்த FRB சிக்னல் கேட்டுள்ளது. இது இதய துடிப்பு போல இருப்பதாக அந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இது ரேடியோ பல்சர் அல்லது மேக்னெட்டர் போன்ற அலையாக இருக்கலாம். இதுதான் மர்மமாக இருக்கிறது.
இதேபோன்று பால்வெளியின் மையத்தில் வரும் சிக்னல்களைத்தான் ஆய்வு செய்ய cornell university ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications