இதுவரை இப்படி நடந்ததே இல்லை! சென்னைக்கு வந்து அசந்து போன சர்வதேச செஸ் வீரர்.. சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: 2022 ஒலிம்பியாட் தொடருக்காக சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர் பாராட்டி உள்ளார்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த தொடர் தொடங்க உள்ளது.
அங்கு இருக்கும் போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் மட்டுமின்றி சென்னை முழுக்க இதற்காக அலங்காரம் செய்யப்பட உள்ளது

ஏற்பாடுகள்
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தற்போது மொத்தமாக சென்னையே அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. சாலைகள் சரி செய்யப்பட்டு, செஸ் தொடர்பான தீமில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. சர்வதேச வீரர்களை கவரும் வகைகள் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, சென்னை சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.

மாற்றம்
இப்போட்டியில் ஏறத்தாழ 187 நாடுகளிலிருந்து 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டி நடைபெறும் இடத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான லோகோவான "தம்பி" குதிரை பொம்மை வைக்கப்பட்டு உள்ளது. சென்னை மெரினா தொடங்கி பல இடங்களில் இந்த பொம்மை வைக்கப்பட்டு உள்ளது
Recommended Video

ஏற்பாடுகள்
அதோடு வீரர்களுக்கான ஹோட்டல்கள், தனி கார் வசதிகள், பாதுகாப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு அதன் சுடர் இன்று மாமல்லபுரம் வந்தது.இந்தியாவில் 75 நகரங்களை கடந்து மாமல்லபுரம் வந்தடைந்த சுடருக்கு அமைச்சர்கள் வரவேற்புகொடுத்தனர். 40 நாட்கள் பயணித்து இந்த சுடர் போட்டி நடக்கும் இடத்திற்கு இன்று வந்தது. தொடரை முன்னிட்டு சென்னைக்கு சர்வதேச செஸ் வீரர்கள் வர தொடங்கி உள்ளனர்.

சென்னை வீரர்
இந்த நிலையில்தான் சென்னைக்கு வந்த ஸ்பானிஷ் நாட்டு செஸ் வீரர் வெல்லேஜு போன்ஸ் தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகளை புகழ்ந்து பாராட்டி உள்ளார். இவர் ஸ்பானிஷ் நாட்டு கிராண்ட் மாஸ்டர். 5 முறை ஸ்பானிஷ் நாட்டு சாம்பியஷிப் பட்டத்தை வென்றவர். 16 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். 2000ம் ஆண்டு நடந்த சர்வதேச அண்டர் 18 உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்தான் வென்றார்.

சென்னை
இந்த நிலையில் சென்னைக்கு வந்த வெல்லேஜு போன்ஸ் அதை பற்றி ட்விட் செய்துள்ளார். சென்னைக்கு காலை 5 மணிக்கு வந்தேன். எதையாவது பற்றி புகார் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் இதுவரை புகார் சொல்லும் விதமாக எதையும் பார்க்கவில்லை. எல்லாமே மிக சிறப்பாக உள்ளது. நிர்வாகிகள் ஏற்பாட்டாளர்கள் மிக சிறப்பான வரவேற்பை எனக்கு கொடுத்தனர்.

சிறப்பான ஏற்பாடு
அதோடு ஒலிம்பியாட் வீரர்களுக்கு என்று தனியாக இமிக்ரேஷன் ஏற்பாடுகள் உள்ளன. உடனே எனக்கு ஹோட்டல் அறை கொடுக்கப்பட்டது. இதுவரை இவ்வளவு வேகமாக ஹோட்டல் அறை பெற்றது இல்லை. இங்கே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய 10வது தொடரை கொண்டாட போகிறேன் என்று சந்தோசமாக வெல்லேஜு போன்ஸ் ட்விட். ஒலிம்பியாட் தொடருக்காக சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை இவர் பாராட்டி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications