இளையராஜா சேர்த்த அந்த ஒத்த எழுத்து.. "பாடும் நிலா பாலு"வை.. உலகத்துக்கே கொண்டு சேர்த்த பெருமை
பாடும் நிலா பாலு.. பெயர் வர காரணம் என்ன?
சென்னை: "பாடும் நிலா பாலு" என்றே நாம் எஸ்பிபியை இவ்வளவு காலம் அழைத்து வருகிறோம்.. இதற்கு என்ன காரணம்? "பாடும் நிலா பாலு" என்ற பெயர் எப்படி அமைந்தது?
அப்போதெல்லாம் எந்த இசை கேசட்டிலும் சரி, ரிக்கார்ட்டிங் தட்டுகளிலும் சரி பாடும் நிலா பாலு என்றுதான் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.
இலங்கை வானொலி முதல் எப்ஃஎம்கள் வரை பாடும் நிலா பாலு என்று தனியாக ஒரு புரோக்கிராம் மணிக்கணக்கில் நடத்தியும் வருகிறார்கள்.

நிலா
வெளிநாடு, உள் மாநிலங்கள் என கச்சேரிக்கு எங்கு சென்றாலும், இந்த அடைமொழியை வைத்துதான் அவரை வரவேற்பார்கள்.. இந்த பெயர் அவருக்கு எப்படி வந்தது? அவரது முதல் பாடலே ஆயிரம் நிலவே வா என்பதுதான்.. இதை தொடர்ந்து வான் நிலா நிலா, என்பது உட்பட எத்தனையோ நிலா பாட்டுக்களை பாடியிருக்கிறார்.. அப்போதுகூட இந்த அடைமொழி அவருக்கு வந்ததில்லை.

உதயகீதம்
ஆனால் உதயகீதம் படத்தின்போதுதான் பட்டப்பெயர் சேர்ந்துள்ளது.. இதற்கு காரணம் இசைஞானி இளையராஜாதான்.. எப்போதுமே இளையராஜா சார் மெட்டுக்கு பாட்டு போடுவதுதான் வழக்கம்.. உதயகீதம் படத்துக்கான ரிக்கார்ட்டிங் நடந்து கொண்டிருந்தது. சிறைக்குள் இருந்து ஹீரோவும், சிறைக்கு வெளியே ஹீரோயினும் பாடுவதாக சிட்சியூவேஷன்.

பாடு நிலாவே
இதற்கான பாட்டை கவிஞர் மு.மேத்தாவும் எழுதி தந்துவிட்டார்.. அப்போது திடீரென இளையராஜாவுக்கு ஒரு சந்தேகம் வந்ததாம்.ஜெயிலுக்குள்ள இருந்து ஹீரோ "பாடு நிலாவே" என்று எப்படி சொல்ல முடியும்? என்பதே அந்த டவுட்.. அதனால் ரிக்கார்டிங்கும் உடனடியாக நிறுத்தப்பட்டது. பக்கத்தில் இருந்த மேத்தாவிடம், ஹீரோ ஏன் நிலாவை பார்த்து பாடணும்? அதனுடன் ஒரு "ம்" சேர்த்துக்கலாமா? நாயகியை நிலாவை பார்த்து பாடு நிலாவே என்றும், ஹீரோ பாடும் நிலாவே என்று பதில் சொல்வதும் போலவும் மாற்றலாமா? என்று இளையராஜா கேட்டார்.

ஒத்த எழுத்து
அதற்கு மேத்தாவும் சரி என்று ஒப்புக் கொண்டுள்ளார். இளையராஜா மாற்றிய அந்த ஒத்த எழுத்துதான், அந்த பாட்டுக்கே பெருமையை சேர்த்தது.. இதன்பிறகு "பாடும் நிலா பாலு" என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது.. நம்முடனும் அந்த வார்த்தை ஒட்டிக் கொண்டது.. நிலாவை பார்க்கும்போதெல்லாம் பாலு சாரும் சேர்ந்துதான் நம் கண்ணுக்கு தெரிவார்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications