சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர் அப்பாவு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. 9 நாட்கள் நடந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம், குவைத் தீ விபத்து சம்பத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சட்டசபைக் கூட்டத்தில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வந்தது. வருவாய் துறை, தொழில் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் அந்தந்த துறை சார்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் சட்டசபையில் கடுமையாக எதிரொலித்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 4 நாட்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து கடந்த 26 ஆம் தேதி அன்று சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் 27 ஆம் தேதி முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.
இன்று தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றினார்.
அப்போது காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் 100 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 9 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications