எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்: சபாநாயகர் அப்பாவு சொன்னது என்ன? செங்கோட்டையன் பேட்டி
சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அதிமுக எம்,எல்.ஏக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் , சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ் இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதமும் பேரவை தலைவர் அப்பாவுவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சட்டசபை கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையை அப்பாவு மாற்றவில்லை.

இதற்கு சட்டப்பேரவையிலும் கடுமையான எதிர்ப்பை அதிமுக தெரிவித்து வந்தது. பல முறை அதிமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டாலும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று இல்லை எனவும் அதிமுக தலைமை பதவி விவகாரத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சபாநாயகர் அப்பாவு சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ள சூழலில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். செங்கோட்டையன், சி விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அப்பாவுவை தலைமை செயலகத்தில் சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செங்கோட்டையன் கூறியதாவது:- அதிமுக எஅதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்றாவது முறையாகா சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இருக்கை வழங்கும் விவகாரத்தில் இதுவரையில் சபாநாயகர் பரிசீலனையில் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அன்று எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவராக இருந்த துரைமுருகன் அவர்களை இருக்கை அமர வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேமுதிக தலைவராக, துணைத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கபப்ட்டு இருக்கிறார். இது சட்டமன்ற விதியின் படி மரபின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
ஆகவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் சட்டமன்றத்திலே இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தை அவர்களுக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபப்ட்டு இருக்கிறது. பேரவைத்தலைவர்களும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்கள். எங்கள் கடிதத்தை பொறுத்தவரை நீங்கள் இடத்தை வழங்குகிறீர்களா இல்லையா என்பதை தெளிவாக கடிதம் மூலம் பதில் வழங்குங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் மூலம் பதில் வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி அதற்கான நடவடிக்கையை எடுப்பார். சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான கடிதத்தின் மூலமாக எங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் கூட்டத்தொடரில் பங்கேற்பீர்களா என்று கேட்கிறீர்கள்.
எதிர்க்கட்சிதலைவர்தான் இதை முடிவு செய்ய வேண்டும். நாங்கள் சபாநாயகரிடம் கேட்கிற பொழுது பரிசீலைனையில் இருக்கிறது என்றார். இனி பரிசீலனையில் என்ன இருக்கிறது என்பதை கடிதம் மூலமாக கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டுள்ளது. இனியும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications