சம்மர் லீவுக்கு எண்ட்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: கோடை விடுமுறை நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் தொடங்குகின்றன. எனவே, வெளியூர் சென்னறவர்கள் மீண்டும் ஊர் திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனையடுத்து மக்கள் குடும்பங்களுடன் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றுள்ளனர். இந்நிலையில்

பள்ளிகள் ஜூன் 6ம் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 12ம் ஆக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி மீண்டும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பேருந்து பயன்பாடு அதிகரிக்கும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. எனவே, இந்த நெருக்கடியை சமாளிக்க கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை மற்றும் நெல்லை என 6 மண்டலங்களிருந்தும், இது தவிர, விரைவு போக்குவரத்து மற்றும் மாநகர போக்குவரத்து என 8 மண்டலங்களில் 20,258 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜூன் 11ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைகிறது. எனவே மக்கள் தங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்ப பேருந்துகளை முன்பதிவு செய்திருக்கின்றனர். இயல்பாகவே இந்த காலத்தில் பேருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும்.
எனவே இதனை சமாளிக்க போக்குவரத்து கழகம் வசம் இருக்கும் அனைத்து பேருந்துகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் மக்கள் நெரிசல் குறைக்கப்படும். அதேபோல சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கெனவே பணி நிலையங்களில் இருந்த பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு தயாராக இருக்கிறது. இந்த நெருக்கடியை நாங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எதிர்கொள்வோம்.

பெரும்பாலான பயணிகள் இரவு நேரத்தில் பயணம் செய்வதால் அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். நெரிசலை சமாளிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது வழக்கமாக இயக்கப்படும் 20,258 பேருந்துகளை விட கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஜூன் 09ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
மாநிலத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 850 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இது தவிர மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications