உடனடி கடன்.. இன்று முதல் சிறப்பு முகாம்.. வாரம் 200 கட்டினால் போதும்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறு வணிகர்களுக்கு "முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" சிறப்பு முகாம் இன்று (ஜனவரி 5) முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிக்ஜாம் புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், சாலைகளில் கடை வைத்திருந்த சிறு வியாபாரிகளின் கடைகள் தண்ணீரில் மூழ்கியதால், கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு சிறப்பு கடன் முகாம் நடைபெறுகிறது. சிறு வணிகர்கள் இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
தமிழக முதல்வர் அறிவுரையின்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுது பார்க்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் 'முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்' எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் (புயலால் பழுதடைந்த ஆட்டோவினை சீரமைக்க), அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.
இக்கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஒரு வருட காலத்திற்குள் உரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் அல்லது மாதந்தோறும் ரூ.1000 வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்தலாம். 'முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்' முகாம்கள் நான்கு மாவட்டங்களிலும் 05.01.2024 முதல் 12.01.2024 வரை நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளான தியாகராய நகர் ரோட்டில் செயல்பட்டு வரும் பாண்டிபஜார் கிளை, திருவல்லிக்கேணி, சிங்கராசாரி தெருவில் செயல்பட்டு வரும் திருவல்லிக்கேணி கிளை, அசோக் நகர், 4 வது அவென்யூவில் செயல்பட்டு வரும் அசோக் நகர் கிளை, அண்ணா நகர், முதல் மெயின்ரோட்டில் செயல்பட்டு வரும் அண்ணா நகர் கிழக்கு கிளை, ஆதம்பாக்கம் செக்ரடேரியட் காலனியில் செயல்பட்டு வரும் ஆதம்பாக்கம் கிளை, பெரியார் நகர், கார்த்திகேயன் காலனியில் செயல்பட்டு வரும், பெரியார் நகர் கிளை, பிராட்வே, பிரகாசம் சாலையில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் என 7 இடங்களில் நடைபெறவுள்ளது.
அதேபோல, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளான திருப்பெரும்புதூர் காந்திரோட்டில் செயல்பட்டு வரும் திருப்பெரும்புதூர் கிளை, குன்றத்தூர், சடையாண்டீஸ்வரர் கோயில் தெருவில் செயல்பட்டு வரும் குன்றத்தூர் கிளை, செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலையில் செயல்பட்டு வரும் செங்கல்பட்டு கிளை, திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் செயல்பட்டு வரும் திருப்போரூர் கிளை,
திருவள்ளூர், ஜெயா நகரில் செயல்பட்டு வரும் திருவள்ளூர் கிளை, கடம்பத்தூர் கடை வீதியில் செயல்பட்டு வரும் கடம்பத்தூர் கிளை, பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பூவிருந்தமல்லி கிளை, செங்குன்றம் பஜனை கோயில் தெருவில் செயல்பட்டு வரும் செங்குன்றம் கிளை, திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் மீஞ்சூர் கிளை, பொன்னேரி புதிய தேரடி சாலையில் செயல்பட்டு வரும் பொன்னேரி கிளை, கும்மிடிப்பூண்டி, காட்டுக் கொல்லைத் தெருவில் செயல்பட்டு வரும் கும்மிடிப்பூண்டி கிளை, ஊத்துக்கோட்டை பஜார் தெருவில் செயல்பட்டு வரும் ஊத்துக்கோட்டை கிளை என 12 இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு கடன் முகாம்களை சிறுவணிகர்கள் வங்கிக் கிளைகளை நேரில் அணுகியோ அல்லது உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை கூட்டுறவுத் துறையின் வலைதளத்தில் உள்ள இணையவழி விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பித்தோ பயனடையுமாறு அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications