விரல் தேய தேய.. SIR பட்டியலை புரட்டும் திமுகவின் "பழைய கைகள்".. இந்த பதிவை பாருங்க! ஆடிப்போய்டுவீங்க
சென்னை: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வந்த பிறகு ஆளும் திமுகவினர் அந்த பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை தீவிரமாக ஆய்வு செய்து.. அவர்களை மீண்டும் சேர்க்க திமுகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். திமுகவின் பழைய, மூத்த பூத் மெம்பர்கள் இதற்காக நேரடியாக களமிறங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 15.18% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.

ஸ்டாலின் பிளான்
SIR பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆளும் திமுக தீவிரமாக திட்டமிட்டு வருகிறதாம். இதற்காக தீவிரமாக திமுக காய் நகர்த்த திட்டமிட்டு வருகிறதாம். விடுபட்டவர்கள் எல்லோரையும் மீண்டும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்பதில் ஆளும் திமுக தீவிரமாக இருக்கிறதாம்.
இது தொடர்பாக, திமுக ஊடகத் தொடர்பு மாநில துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்பவர் செய்துள்ள போஸ்டில், SIR வரைவு வாக்காளர் பட்டியல் வந்த பிறகு, நேற்று அப்பாவை சந்தித்தேன். வரைவு பட்டியல் வந்ததில் இருந்து, பெயர் இருக்கா ? சரி பார்த்தியா ? என்று தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
நேற்று பார்த்த உடனே முதல் கேள்வியாக அதையே கேட்டார். வீட்டில் உள்ள எட்டு ஓட்டும் வந்துடுச்சு என்றேன். பாகம் முழுவதையும் சரி பார்க்கலயா என்றார். எங்கள் சொந்த பாகத்தின் முழு பட்டியலையும், நீக்கப் பட்டவர்கள் பட்டியலையும் எடுத்துக்கொண்டு அவரோடு அமர்ந்தேன்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி எங்களுடையது. பாகத்தில் மொத்தம் 787 வாக்குகள், 40 வாக்குகள் நீக்கப்பட்டு, 747 வாக்குகள் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 40 பேரா என்று அதிர்ச்சியாக கேட்டவர், ஒவ்வொரு பெயராக வாசிக்க சொன்னார்.
பெரும்பாலும் அவர்கள் பெயரை வைத்தே அடையாளம் கண்டுகொண்டார், அல்லது பெற்றோர் பெயரையோ, வயதையோ கொண்டு கண்டறிந்தார். 2-3 பெயர்களை தவிர அனைவரையும் கண்டுபிடித்துவிட்டார். இரட்டை பதிவு என்று மூன்று பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. அவை வரைவு பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய தேடச் சொன்னார்.
ஒவ்வொரு பெயரை சொல்லும்போதும், அவர்கள் குடும்பம் குறித்து, அவர்களின் அரசியல் சார்பு குறித்து என்று அத்தனை கதைகளை பகிர்ந்தார். ஊர் குறித்து இவ்வளவு தகவல்களை நேற்று தான் அறிந்துகொண்டேன். மூன்று மணி நேரத்திற்கு மேலாக பட்டியலை அலசிய பிறகு, நீக்கப்பட்ட 40 பேரில் 5 வாக்குகள் தவறாக நீக்கப்பட்டுள்ளதையும், இடப்பெயர்வு என்று குறிப்பிடப்பட்டவர்களில் 9 பேரை தனியாக குறிப்பிட்டு, அவர்களுக்கு வேறு ஊரில் ஓட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். சிலருக்கு அவரே போன் செய்தும் பேசினார்.
SIR வரைவு வாக்காளர் பட்டியல் வந்த பிறகு, நேற்று அப்பாவை சந்தித்தேன்.
— Suriya Krishnamorthy (@SuriyaKML) December 21, 2025
வரைவு பட்டியல் வந்ததில் இருந்து, பெயர் இருக்கா ? சரி பார்த்தியா ? என்று தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
நேற்று பார்த்த உடனே முதல் கேள்வியாக அதையே கேட்டார்.
வீட்டில் உள்ள எட்டு ஓட்டும் வந்துடுச்சு… pic.twitter.com/Me55pHayWE
கிளைக் கழகத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்து 10 - 15 ஆண்டுகளுக்கு முன்பே முழுதாக வெளியே வந்து விட்டார், 18 வயதிலிருந்து எல்லா தேர்தலிலும் தவறாமல் பணியாற்றிய தேர்தல் நாளைய பாக முகவர் பணியையும் கூட கடந்த சில தேர்தல்களாக மாற்றி கொடுத்துவிட்டார், அந்த ஊரை விட்டே பணி நிமித்தம் தற்காலிகமாக வெளியே வந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டது, BLA2 - BLC என எந்த பொறுப்பிலும் இல்லை.
ஆனாலும் வரைவுப் பட்டியல் வந்த நொடியிலிருந்து, அதை முழுதாக சரிபார்த்து முடியும் வரை அவருக்கு பதற்றம் மட்டும் குறையவே இல்லை. 45 ஆண்டுகளுக்கு மேலாக விரல் தேய அந்த பட்டியலை ஒவ்வொரு முறையும் புரட்டியவர், கட்சி சார்பில் பூத் சிலிப் எழுதிக்கொடுத்த காலத்திலிருந்து தற்போது வரை அதில் ஏற்பட்ட எல்லா மாற்றங்களுக்கும் சாட்சியாக இருந்தவர், ஒரு திட்டமிட்ட சதியின் மூலம் அது சிதைக்கப்படுவது குறித்த கவலை அவருக்கு அடங்கவில்லை.
சொந்த வாழ்வின் சுக, துக்கம் போல இதையெல்லாம் கருதுகிற தொண்டர்கள் இந்த இயக்கத்தின் படைவலிமை. டெல்லியும், நாக்பூரும் தீட்டுகிற சதிகளை இனமான தலைவர் முதல்வர் ஸ்டாலினின் அவர்களின் சொல்படி, இதே உணர்வோடு முறியடிப்போம், என்று கூறி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications