வீட்டு மனை பட்டா மாத்தணுமா? இலவச வீட்டு மனை பட்டாக்கள்.. அசரடிக்கும் தமிழ்நாடு அரசு.. மாஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒரு வருடத்துக்கு, தமிழகத்தில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்களை வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் மாவட்டங்களில் நடக்க போகும் முகாம்கள் குறித்தும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

Special Patta Camps in Tamil Nadu on the occasion of karunanidhi centenary Kalaignarcentenarycelebration

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா முகாம்கள்: இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்களை வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலர், குமார் ஜெயந்த் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.. அதில் உள்ளதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாகொண்டாட்டங்கள் இந்தாண்டு ஜூன் மாதம் முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியை உறுதிசெய்யும் நோக்கில் வருவாய்த் துறை மூலம் தகுதியான பயனாளிகளுக்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டுமனை பட்டாக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

Special Patta Camps in Tamil Nadu on the occasion of karunanidhi centenary Kalaignarcentenarycelebration

புறம்போக்கு நிலம்: நத்தம் புறம்போக்கு நிலங்களை பொறுத்தவரை, கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களில் இருந்து தகுதியான வீடற்ற ஏழைகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. நத்தம் புறம்போக்கு நிலங்கள் போதிய அளவு இல்லாவிட்டால், பிற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து, கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்தும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

ஆதி திராவிடர்: இதுதவிர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் ஏற்கெனவே கடந்த காலங்களில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு இணையவழியில் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர, பாதுகாக்கப்பட்ட வனங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வேளாண்மை செய்யும் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு அவர்கள் வசிக்கும், வேளாண்மை செய்து வரும் இடத்துக்கான நில உரிமை பட்டாக்களும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.

வழிகாட்டுதல்கள்: மாவட்டம்தோறும் அரசால் வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் சிறப்பு பட்டா முகாம்களை துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் நடத்தவேண்டும். பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் பட்டாக்கள், மாறுதல் ஆணைகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

பட்டா மாறுதல்: பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை பெற்று, இணையவழியில் பதிவு செய்து தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பட்டா மாற்ற ஆணைகள் இணைய வழியில் வழங்கப்பட வேண்டும். அதேபோல் பல்வேறு வருவாய்த் துறை ஆவணங்களில் உள்ள பிழைகளையும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று அவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சிறப்பு முகாம்களில் பெறப்படும் வருவாய்த் துறை தொடர்பான இதர மனுக்கள் மற்றும் இதர துறைகள் சார்ந்த மனுக்களை உரிய அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு பெற வேண்டும். இந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் முகாம்கள்: இதனிடையே, கோவை, சேலம் மாவட்டங்களில் தலா 5 முகாம்களும், கடலூர், திருச்சி, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் தலா 4 முகாம்களும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, துாத்துக்குடி, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், வேலூர் மாவட்டங்களில் தலா 3 முகாம்களும், மற்ற மாவட்டங்களில் தலா இரண்டு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+