தலைமறைவான ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஒடிஸாவில் மாஜி டிஜிபி தஞ்சம்? விரைந்த தனிப்படை போலீஸ்
சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் கைது நடவடிக்கையை தவிர்க்க அவரது சொந்த மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் இன்று ஒடிஸா விரைந்துள்ளனர்.
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து ராஜேஷ் தாஸை கைது செய்ய போலீஸார் அவருடைய வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை என அவரது வீட்டில் தோட்ட வேலை பார்ப்பவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ராஜேஷ் தாஸ் தலைமறைவானதாக கருதப்பட்டு சிபிசிஐடி தரப்பில் இரு தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் தனது சொந்த மாநிலமான ஒடிஸாவுக்கு சென்றிருக்கிறார் என கிடைத்த தகவலின்படி ராஜேஷ் தாஸை தேடி தனிப்படை போலீஸார் ஒடிஸாவுக்கு விரைந்துள்ளனர்.
பின்னணி என்ன?: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
தீர்ப்பு விவரம்: இது குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் முன்னாள் டிஜிபி உத்தரவின் பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ 500 அபராதமும் விதிக்கப்பட்டது.
பாலியல் புகார்.. மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி .. அதிரடி தீர்ப்பு
மேல்முறையீட்டு மனு: இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸும் கண்ணனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அப்போது பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி இந்த மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 இல் தீர்ப்பு அளிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை வந்த போது ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், சம்பவம் நடந்த இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால் இந்த வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் அதன் மீதான உத்தரவு வரும் வரை விழுப்புரம் நீதிமன்றத்தில் தீர்ப்பு தேதியை ஒத்தி வைக்கும்படி மனுதாக்கல் செய்தனர்.
ராஜேஷ்தாஸ் தலைமறைவு: ஆனால் இந்த மனுவை மாவட்ட நீதிபதி பூர்ணிமா ஏற்க மறுத்து ராஜேஷ் தாஸ், கண்ணனின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தார். மேலும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 20,500 அபராதத்தையும் உறுதி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் எப்படியும் கைது செய்யப்படுவோம் என அஞ்சி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications