ஃபார்முலா 4 கார் ரேஸ்.. FIA சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: சென்னையில் நடத்தப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்த நிலையில், FIA சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும் நாளையும் நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளன.

சென்னை தீவுத்திடலைச் சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
அதேசமயம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை, பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
மழை காரணமாக பந்தயச் சாலையை ஆய்வு செய்து சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விசாரணைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் இன்று பிற்பகலில் விசாரணை நடைபெற்றது.
சென்னையில் பெய்த மழை காரணமாக FIA சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், FIA சான்றிதழ் பெற கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்றும் கோரியது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பு.
இதனை ஏற்று, சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) சான்றிதழ் பெறுவதற்கு இன்று இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இரவு 8 மணிக்குள் FIA சான்று பெறாவிட்டால் கார் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். FIA சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications